புதுடெல்லி:கடந்த ஆண்டு எனது இ-மெயில் ஹேக் செய்யப்பட்டது என டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றங்களைக் குறித்த ஒரு மாநாட்டில் கலந்து பேசும் பொழுது டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதியான மதன் பி லோகர் இதனை தெரிவித்தார்.
"நான் ஆட்டோமொபைல் வியாபாரம் துவங்கியதாக எனது இ-மெயிலிருந்து ஹேக்கர்கள் செய்தி அனுப்பியுள்ளனர். இதனால் பலரும் என்னைத் தொடர்புக்கொண்டு நீதிபதி பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு வியாபாரம் துவங்கிவிட்டீர்களா? என கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் கம்ப்யூட்டர்கள் ஹேக்கர்களின் கைகளில் சிக்கிவிடுமோ என்பதுதான் எனது பயம். உயர்நீதிமன்ற கம்ப்யூட்டர்களில் தீர்ப்பின் நகல்களும், நீதிமன்ற நடவடிக்கைகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் சுப்ரீம்கோர்ட் இணையதளத்தில் நீதிபதிகளின் வங்கிக்கணக்கு விபரங்களை நீக்கியதாக தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நீதிபதிகளின் கணக்கு விபரங்களை திருடி பணத்தை இணையதளம் மூலம் திருடுவதற்கு வாய்ப்புள்ளது என ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்விபரங்கள் நீக்கப்பட்டன.
குறிப்பு:ஹேக் என்பது கணினி நினைவகத்தின் உள்ளடக்கங்களை ஒப்புதலின்றி அடைதலாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எனது இ-மெயிலை ஹேக் செய்து விட்டார்கள் டெல்லி ஹைகோர்ட்: தலைமை நீதிபதி"
கருத்துரையிடுக