18 மே, 2010

9/11 கிரவுண்ட் ஜீரோவுக்கு அருகில் மஸ்ஜித்- அமெரிக்காவில் புதிய சர்ச்சை

வாஷிங்டன்:செப்டம்பர் 11 தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையம் நிலைக்கொண்ட க்ரவுண்ட் ஜீரோவுக்கு அருகில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை அமெரிக்காவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மஸ்ஜிதை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களை அவமானப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாம் மஸ்ஜித் நிர்மாணம்.

13 மாடிகள் கொண்ட நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள முஸ்லிம் கம்யூனிட்டி மையத்தில் நீச்சல்குளம், ஜிம், தியேட்டர், விளையாட்டுத் திடல் ஆகியவற்றுடன் மஸ்ஜிதும் நிர்மாணிக்கப்படுகிறது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி விமானங்களை கடத்திச்சென்று உலக வர்த்தகமையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3000 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின் பத்தாவது நினைவுதினம் அனுஷ்டிக்கப்படும் அடுத்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிதான் இக்கட்டிடம் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து அடுத்தமாதம் கண்டனப்பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்டாஃப் இஸ்லாமிசேஷன் ஆஃப் அமெரிக்கா என்ற அமைப்பின் எக்ஸ்க்யூடிவ் இயக்குநர் பமீலா கல்லர் தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "9/11 கிரவுண்ட் ஜீரோவுக்கு அருகில் மஸ்ஜித்- அமெரிக்காவில் புதிய சர்ச்சை"

கருத்துரையிடுக