18 மே, 2010

ஷொராஹ்ப்தீன் சேக் என்கவுண்டர் வழக்கு:பெண் ஐ.பி.எஸ்.​ அதிகாரி கீதா ​ஜோஹ்ரியின் செயல்பாட்டை விசாரிக்க கோரிக்கை

அகமதாபாத்:​குஜராத்தில் ஷொராஹ்ப்தீன் சேக் என்கவுண்டர் வழக்கை முன்னதாக விசாரித்த பெண் ஐ.பி.எஸ்.​ அதிகாரி கீதா ​ ​ஜோஹ்ரியின் அப்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

​என்கவுண்டர் சம்பவத்திற்க்கு பிறகு ஷொராஹ்ப்தீனின் மனைவி உடலை அகற்ற உதவி புரிந்ததாக கைது செய்யப்பட்டுள்ள நரேந்திர அமீன் என்பவர் இக்கோரிக்கையை சிபிஐ நீதிபதி முன்பாக திங்கள்கிழமை தெரிவித்தார்.​ ​ ​ ​​

அதில் விசாரணை அதிகாரி கீதா ஜோஹ்ரி,​​ பல அரசியல்வாதிகள்,​​ உயர் போலீஸ் அதிகாரிகள்,​​ கிரிமினல்கள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.​ அதனால் அவர்,​​ ​என்கவுண்டர் வழக்கின் விசாரணையை வேறு திசைக்கு மாற்றினார்.​ ​ ​

​சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட நாதுஷா ஜடேஜா என்பவர் தலைமறைவாகி விட்டதாக அறிக்கை அளித்தார்.​ ஆனால் சில நாளில் நாதுஷா,​​ சரணடைந்தார்.​ அப்போது நாதுஷா ஒரு சாட்சிக்காரர் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் கீதா ஜோஹ்ரி.​ இதில் பல்வேறு மர்மங்கள்,​​ சந்தேகங்கள் உள்ளன என்றார் அமீன்.​ ​

​2007-ல் சொராப்தீன்,​​ குஜராத் போலீஸாரால் ​என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.​ அத்துடன் அவரது மனைவி கெளசர் பீயும் கொல்லப்பட்டார்.​​

இந்த ​என்கவுண்டர் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.​ இதையடுத்து இந்த வழக்கை மாநில சிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.​ அதில் ஒரு விசாரணை அதிகாரியாக செயல்பட்டவர் கீதா ஜோஹ்ரி.​ ​​ இந்த என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பான விசாரணை தாமதப்பட்டு வருவதாக எழுந்த புகாரையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் அண்மையில் ஒப்படைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் சேக் என்கவுண்டர் வழக்கு:பெண் ஐ.பி.எஸ்.​ அதிகாரி கீதா ​ஜோஹ்ரியின் செயல்பாட்டை விசாரிக்க கோரிக்கை"

கருத்துரையிடுக