கோபன்ஹெகன்:நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட டென்மார்க் பத்திரிகையான ஜில்லண்ட்ஸ் போஸ்ட்டனின் நிருபருக்கு பாகிஸ்தான் விசாவை புதுப்பித்து வழங்கவில்லை.
பத்திரிகையின் நிரூபர் டாமஸ் காட் ஆண்டேர்சனின் பாதுகாப்புக் குறித்து தங்களுக்கு எவ்வித உறுதியும் தரமுடியாது என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதாக அப்பத்திரிகையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆண்டேர்சன் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் பாகிஸ்தானில் விநியோகம் செய்தார் என்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தான் அதிகாரியை மேற்கோள்காட்டி நேஷன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தும் டென்மார்க் தூதர் இவ்விஷயத்தைக் குறித்து பேசுவார் என டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லினி எஸ் பேர்ல்ஸன் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன் வெளியிட்ட பத்திரிகையின் நிரூபருக்கு விசாவை ரத்துச் செய்தது பாகிஸ்தான்"
கருத்துரையிடுக