18 மே, 2010

குவைத்தில் இந்திய நர்ஸ்களுக்கு அதிக வரவேற்பு

குவைத்தில் இந்திய நர்ஸ்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.​ அந்நாடு விரைவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 2000 நர்ஸ்களை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது.

​குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிக நர்ஸ்களை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது.​ இதில் இருந்து இந்திய நர்ஸ்களின் திறமைக்கும்,​​சேவைக்கும் அங்கு அதிக வரவேற்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

​ மருத்துவ வசதியை விரிவுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.​ இதனால் இந்தியா,​​ இலங்கை,​​ எகிப்து,​​ பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2000 நர்ஸ்களை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளோம்.​ நர்ஸ்களை தேர்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.​ அந்தக் குழு இந்த நாடுகளுக்குச் சென்று திறமையான நர்ஸ்களை தேர்வு செய்யும் என்று குவைத் மருத்துவத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

​ வெளிநாடுகளில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ்கள் தேர்வு செய்யப்படுவர்.​ அவர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

​ வளைகுடா நாடுகளில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்திய நர்ஸ்களுக்கு சமீபகாலமாக நல்ல வரவேற்பு உள்ளது.​ இதனால் நர்ஸிங் படித்து விட்டால் உள்நாட்டில் இல்லாவிட்டாலும் வெளிநாட்டிலாவது எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இந்திய பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

​ இந்தியாவில் சமீபகாலமாக நர்ஸிங் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதைக் காட்டுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குவைத்தில் இந்திய நர்ஸ்களுக்கு அதிக வரவேற்பு"

கருத்துரையிடுக