18 மே, 2010

'அன்வர் அவ்லாகி எங்களுடைய பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார்' - அல்காயிதா

ஸன்ஆ:அமெரிக்காவால் கொல்வதற்கு உத்தரவிடப்பட்ட யெமன் நாட்டு மார்க்க அறிஞர் அன்வர் அல் அவ்லாக்கி தங்களுடைய பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார் என அல்காயிதா அறிவித்துள்ளதாக அவ்வமைப்பின் அரபி பிரிவாக கருதப்படும் எ.க்யூ.எ.பியின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'அவ்லாகியை பாதுகாப்பது மார்க்க ரீதியான பொறுப்பாகும். அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதன் பலனை அமெரிக்கா அனுபவிக்கும். அமெரிக்காவின் தவறான கொள்கைகளை சுட்டிக்காட்டினார் என்பதுதான் அமெரிக்கா அவ்லாகியின் மீது சுமத்தும் குற்றம். ஆனால் தவறை சுட்டிக் காட்டுவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். அதன் பெயரில் தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டால் அதனை தடுக்க வேண்டியது முஸ்லிம்களுடைய பொறுப்பாகும்' இவ்வாறு 10 நிமிட உரையில் எ.க்யூ.எ.பி யின் தலைவர் நாஸிர் அல்வஹ்ஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா குடியுரிமைப் பெற்றுள்ள அன்வர் அல் அவ்லாகியை சி.ஐ.ஏவின் பட்டியலில் உட்படுத்தி கொல்வதற்கு உத்தரவிட்டுள்ள பாரக் ஒபாமாவின் நிலைப்பாடு தேசப்பாதுகாப்புக்கு ஒருபோதும் பலன் அளிக்காது என வஹ்ஷி தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'அன்வர் அவ்லாகி எங்களுடைய பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார்' - அல்காயிதா"

கருத்துரையிடுக