21 மே, 2010

(ATM)பணப்பட்டுவாடா இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்டு பாரன் காலமானார்

தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை ​(ஏடிஎம்)​ கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்டு பாரன் ​(84) காலமானார்.

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்வு காரணமாக,​​ ஷெப்பர்டு கடந்த சனிக்கிழமை ஸ்காட்லாந்தில் காலமானார்.​ அவரது இறுதிச் சடங்குகள்,​​ புதன்கிழமை நடைபெற்றன.

எடின்பரோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் படித்த அவர்,​​ ஒருமுறை அவசரத் தேவைக்காக வங்கியில் பணம் எடுக்கச் சென்றார்.​ அப்போது வங்கி பூட்டியிருந்ததால் அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.​ தன்னைப் போலவே பலரும் அவரசத் தேவைக்கு உடனே பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுவதை அவர் உணர்ந்தார்.​ இப்பிரச்னைக்கு தீர்வுகாண,​​ தானாகவே பணம் வழங்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
அவரது எண்ணத்தின் செயல் வடிவமே இப்போது தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் எ.டி.எம்.கள்.​ அவர் கண்டுபிடித்த முதல் எடிஎம்,​​ லண்டனில் 1967-ல் பார்கிளேஸ் வங்கி மூலம் பயன்பாட்டுக்கு வந்தது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "(ATM)பணப்பட்டுவாடா இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்டு பாரன் காலமானார்"

கருத்துரையிடுக