இந்தியாவில் மட்டும் அல்லாமல் வளைகுடா நாடுகளிலும் அட்சய திருதியையால் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது கடந்த ஆண்டை விட சுமார் 11 சதவீதம் அதிகமாக தங்கம் விற்பனையாகியுள்ளது.
'அட்சய திருதியை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 720 கிலோவுக்கு அதிகமாக வளைகுடா நாடுகளில் தங்கம் விற்பனையாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 138 கோடி' என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
யுஏஇ உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மக்கள் இப்போது தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறையாது என்பதால் தங்கமாக வாங்கி சேமிக்க பலரும் விரும்புகின்றனர்.
அட்சய திருதியை அன்று பெண்கள் அணியும் நகைகளும், தங்க நாணயங்களுமே அதிகம் விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: on "வளைகுடா நாடுகளிலும் 'அட்சய திருதியை' மோகம்"
கருத்துரையிடுக