4 மே, 2010

தடைக்கெதிரான சட்டரீதியான போராட்டத்தை தொடர விரும்பவில்லை- சிமி

புதுடெல்லி:தடைக்கெதிரான சட்டரீதியான போராட்டத்தை தொடர விரும்பவில்லை என சிமி சத்திய வாக்குமூலம் அளித்துள்ளது.

'எந்த பயனுமில்லாத நீதி மறுக்கப்படும் உண்மைக்கு மாற்றமான இத்தகைய நடவடிக்கைகளில் விருப்பமில்லை எனவும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகத்தின் நிழலில் நிறுத்தும் மத்திய அரசு தனது விருப்பத்திற்கு நீதித்துறையை பயன்படுத்துகிறது' என முன்னாள் சிமி தலைவர் ஷாஹித் பத்ர் ஃபலாஹி சமர்ப்பித்த சத்திய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயல் தடை ட்ரிப்யூனல் நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் முன்னிலையில்தான் ஃபலாஹி சத்திய வாக்குமூலம் அளித்துள்ளார்.

'சிமி மீதான ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாமலிருந்தும் கூட 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சிமிக்கெதிரான தடையை தொடருவதோடு மட்டுமல்ல கடைசி மூன்று தடை உத்தரவுகளை ட்ரிப்யூனல் உறுதிச்செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் எங்களுடைய வாதத்தை கேட்பதற்கு கூட நீதிமன்றம் தயாராகவில்லை.

ஒவ்வொரு தடைக்குப் பிறகும் ட்ரிப்யூனல் எனக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள் நான் அதற்கெதிராக சமர்ப்பிக்கும் வாதங்களை கேட்காமல் தடையை ஒப்புக் கொள்வார்கள். இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டை அணுகிய பொழுதும் மனுவை மட்டும் ஏற்றுக் கொண்டார்களே தவிர எனது வாதத்தை கேட்க சுப்ரீம் கோர்ட் இதுவரை தயாராகவில்லை'.

நான்காவது தடவை பிறப்பிக்கப்பட்ட தடையை ட்ரிப்யூனல் ரத்து செய்தாலும் உடனடியாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகி தடை உத்தரவை வாங்கியது. கடைசியாக ஐந்தாவது தடவை தடை உத்தரவுக்கு பிறகும்(2010 பிப்ரவரி 26) ட்ரிப்யூனலிருந்து நோட்டீஸ் வந்தது. ஆனால் எவ்வித ஆதாரமுமில்லாமல் பழைய குற்றச்சாட்டுகளைத்தான் கூறியுள்ளதால் பலகீனமான சட்டரீதியான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்ததோம்' என ஷாஹித் பத்ர் ஃபலாஹி தெரிவித்தார்.

'ஏமாற்றப்பட்ட சமூகத்திலிருந்து எழும் எந்தவொரு எதிர்ப்பு சப்தத்தையும் அடக்கி ஒடுக்குவதுதான் மத்திய அரசின் திட்டம் என்பதை புரிந்துக் கொண்டதால் இதனை முடிவுக்கு கொண்டுவருவதை விட வேறு வழியில்லை. சில அடிப்படை உரிமைகள் முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை. முஸ்லிம் என்பதாலேயே சந்தேகத்திற்குரியவர்தான் என்ற செய்தியைத்தான் மத்திய அரசு அளிக்கிறது. இதற்கு சட்டவிரோத செயல் தடைச்சட்டத்தின் சில பிரிவுகளையும், நீதிபீடத்தையும் பயன்படுத்துகிறது. இதனைத்தான் அரச பயங்கரவாதம் என்கிறோம்' என்று ஷாஹித் பத்ர் ஃபலாஹி கூறுகிறார்.

மேலும் '2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 இல் முதல் தடைக்குப் பிறகு சிமி உறுப்பினர்களுக்கெதிராக சுமத்திய ஒரு வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல சிமியுடன் ஒருபோதும் தொடர்பில்லாத முஸ்லிம் அமைப்புகளையும் இட்டுக் கட்டப்பட்ட எந்தவொரு அடிப்படையுமில்லாத குற்றச்சாட்டுகளை சிமியின் முன்னணி இயக்கங்களுடன் தொடர்புபடுத்த சதித்திட்டம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ட்ரிப்யூனலுக்கு பிறகும் அந்த பட்டியல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் நிதியை திரட்டுவதாகவும், சட்டவிரோத செயல்பாட்டை தொடர்வதாகவும் போன்ற எனக்கெதிரான குற்றச்சாட்டுகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது'. இவ்வாறு ஷாஹித் பத்ர் ஃபலாஹி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தடைக்கெதிரான சட்டரீதியான போராட்டத்தை தொடர விரும்பவில்லை- சிமி"

கருத்துரையிடுக