ஆலப்புழா:ஹிஜாப் அணிந்ததற்காக 9-ம் வகுப்பு மாணவியை பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கிய பள்ளிக்கூட தலைமையாசிரியையை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்நடவடிக்கை போதாதென்றும், அவருக்கெதிராக கிரிமினல் வழக்கு பதிவுச்செய்யக்கோரி நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
ஹிஜாப் அணிந்ததற்காக பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆலப்புழா பிலீவேர்ஸ் சர்ச் ஸ்கூலில் 9-வகுப்பு மாணவி நபாலாவின் பெற்றோரையும், பள்ளிக்கூட நிர்வாகிகளையும் அழைத்து மாவட்ட ஆட்சியாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் பள்ளிக்கூட தலைமையாசிரியை மேரி ஜெஸிந்தாவை சஸ்பெண்ட் செய்ததாக பள்ளிக்கூட நிர்வாகம் அறிவித்தது.
பிலிவேர்ஸ் சர்ச் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடை ஏற்படுத்தவில்லை என பள்ளிக்கூட நிர்வாகத்தின் சார்பில் சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிலீவேர்ஸ் சர்ச் கேரள செயலாளர் ஃபாதர்.வில்லியம்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
கிறிஸ்தவ சபையின் தலைமைக்கு தெரியாமல்தான் தலைமையாசிரியை இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என தெரிவித்த வில்லியம்ஸ் இச்சம்பவத்தில் பள்ளிக்கூடத்தில் வேறு எவருக்கும் தொடர்பிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதே பள்ளிக்கூடத்திலேயே நபாலாவுக்கு தொடர்ந்து படிக்க ஏற்பாடுகள் செய்ய நிர்வாகம் தயாரென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் மத நல்லிணக்கத்தை தகர்க்கும் விதமான நடவடிக்கை எடுத்த பள்ளிக்கூட தலைமையாசிரியை பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கியது மட்டும் போதாது அவர் மீது கிரிமினல் வழக்கை பதிவுச்செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று நபாலாவின் தந்தை நஸீர் முஸ்லியார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இதனை கலெக்டரிடமும் தெரிவித்ததாகவும், சரியான பதில் கிடைக்காததால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
நபாலாவின் தொடர் படிப்பிற்காக க்ரஸண்ட் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சமாதான பேச்சுவார்த்தையில் தலைமையாசிரியை பங்கேற்கவில்லை. இதுக்குறித்த அதிருப்தியை கலெக்டர் பள்ளி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகிகள் மற்றும் நபாலாவின் பெற்றோர், வழக்கறிஞர் நஜீப் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஏரியா நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஹிஜாப்:பள்ளிக்கூட தலைமையாசிரியை சஸ்பெண்ட்"
கருத்துரையிடுக