சீனாவில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் சேதம் அடைந்து 23 பேர் பலியாகினர். 161 பேர் காயம் அடைந்தனர். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டியான்ஜியாங் மற்றும் லியாங்பிங் ஆகிய மாகாணங்களில் வியாழக்கிழமை அதிகாலை கடும் சூறைக் காற்று வீசியது. இந்த சூறைக்காற்றைத் தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. சாங்கிங் நகரில் இதனால் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. பல பகுதிகளில் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்த சூறாவளிக் காற்றுக்கு குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். 161 பேர் காயம் அடைந்தனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உள்ளூர் நிர்வாகம் உடனடியாகத் தொடங்கியது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீடுகளை இழந்தவர்களை தங்க வைப்பதற்காக தாற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்தும் எத்தனை வீடுகள் சேதம் அடைந்தன என்பது குறித்தும் சரியான தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்: on "சீனாவின் டியான்ஜியாங் மற்றும் லியாங்பிங் மாகாணங்களில் வீசிய சூறைக் காற்றில் 23 பேர் பலி"
கருத்துரையிடுக