புதுடெல்லி:அணு விபத்து நஷ்டஈடு மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.
இம்மசோதா நிறைவேறினால் மட்டுமே, இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.இம்மசோதாவிற்கு பாஜக, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சமஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர் பி.கே. பன்சாலை வியாழக்கிழமை மாலை சந்தித்து இவ்விஷயத்தில் அரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதையடுத்தே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்: on "அணுவிபத்து நஷ்டஈடு மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்"
கருத்துரையிடுக