7 மே, 2010

கனிஷ்கா விமான விபத்து: விசாரணை அறிக்கை ஜூனில் வெளியீடு

டொரண்டோ:கனிஷ்கா விமான விபத்து தொடர்பான விசாரணைக் கமிஷன் அறிக்கை ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான கனிஷ்கா விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்த விமானத்தில் குண்டு வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள், விமான ஊழியர்கள் உள்ளிட்ட 329 பேர் உயிரிழந்தனர்.

கனடாவிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் குண்டு வெடித்து சிதறி அயர்லாந்து கடலில் விழுந்தது. ஜூன் மாதம் 23-ம் தேதி வந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகளாகிறது. அதற்கு முன்னதாக விசாரணைக் கமிஷன் அறிக்கையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கனடாவில் நிகழ்ந்த மிகப் பெரிய விமான விபத்து இதுவேயாகும். மொத்தம் 6 தொகுதிகளைக் கொண்ட இந்த விசாரணைக் கமிஷனின் ஆங்கில அறிக்கை 3,169 பக்கங்களைக் கொண்டது. பிரெஞ்சு மொழியிலான அறிக்கை 3,869 பக்கங்களைக் கொண்டுள்ளது. விசாரணைக் கமிஷன் பக்கங்களை அச்சிட்டு ஜூன் 10-ம் தேதி வெளியிடுமாறு அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஜஆன் மேஜர் நியமிக்கப்படட்டார். இவர் தனது விசாரணை அறிக்கையை கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவு செய்தார். இந்த விசாரணை அறிக்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவிலேயே அறிக்கை வெளியிடப்படும் என்று விசாரணைக் குழுவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பக்கங்களில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கனிஷ்கா விமான விபத்து: விசாரணை அறிக்கை ஜூனில் வெளியீடு"

கருத்துரையிடுக