30 மே, 2010

புனே குண்டுவெடிப்பு:கைது செய்யப்பட்ட அப்துஸ்ஸமது பட்கல் அப்பாவி? வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்

புனேயில் கடந்த பிப்ரவரி 13 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பின்; சூத்திரதாரி என்று கடந்த மே 24 அன்று மங்களுர் விமான நிலையத்தில் கைதுச் செய்யப்பட்ட அப்துஸ் ஸமது பட்கலின் குடும்பத்தினர் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது பதிவான வீடியோ காட்சிகளில் இடம் பெற்ற ஒருவரது முகம் அப்துஸ் ஸமது பட்கலின் முகசாயல் போல் உள்ளது என்று கூறி துபாயில் இருந்து மங்களுர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அப்துஸ் ஸமது கைதுச் செய்யப்பட்டார்.

ஜெர்மன் பேக்கரியில் வெடிகுண்டை வைத்தவர் அப்துஸ் ஸமது பட்கல் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால் அப்துஸ் ஸமதுவின் குடும்பத்தினர் இதனை வன்மையாக மறுத்தனர்.அவருக்கும் குண்டுவெடிப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர்கள் உறுதிப்பட கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து பரபரப்பான ஒரு வீடியோவை அப்துஸ் ஸமது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை என்.டி.டி.வி. ஒளிபரப்பியுள்ளது.


அப்துஸ் ஸமதுவின் மாமா முஹம்மது இப்றாஹிம் சித்திபாபாவின் மகள் திருமணத்தில் விருந்தினர்களுக்கு அப்துஸ் ஸமது உணவு பரிமாறும் காட்சி இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சியில் திருமணம் நடைபெற்ற தேதி குறித்து எவ்வித ஆதாரமும் இல்லை.இருப்பினும் திருமணம் நடைபெற்ற தினங்கள் இந்த ஆண்டு பிப்ரவரி 5 மற்றும் 6 என்பது வீடியோவில் காட்டப்படும் அழைப்பிதழில் இருந்து தெரிய இயலுகின்றது. வலிமா பிப்ரவரி 15 அன்று நடைபெற்றது என்றும் அதுவரை அப்துஸ் ஸமது மங்களுரிலேயே தங்கி இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

புனேயில் பிப்ரவரி 13 அன்று குண்டு வெடிப்பு நடைபெற்றது.கடந்த மே 24 அன்று காலை 8.30க்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்திறங்கிய அப்துஸ் ஸமது கைதுச் செய்யப்பட்டார். உடனடியாக 17 பேர்களின் உயிரை குடித்த புனே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியை கைதுச் செய்து விட்டதாக மராட்டிய மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏ.டி.எஸ்) அறிவித்தது.

அப்துஸ் ஸமது பட்கல் கைதுச் செய்யப்பட்டது ஒரு பெரும் சாதனை போல் வர்ணிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மிக சாதுரியமாக செயல்பட்டு குண்டுவெடிப்பு நடைபெற்ற 100 நாட்களுக்குள் புனே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியை கைதுச் செய்ததற்காக மராட்டிய பயங்கரவாத எதிர்ப்பு படையினரை பாராட்டினார்.

ஆனால் தற்போது அப்துஸ் ஸமது பட்கலின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் அதிகாரவர்க்கத்தினர் முகத்தில் கரியை பூசியுள்ளது.

மிகப் பெரும் குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு துபாய்க்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு அப்துஸ் ஸமது எப்படி திரும்பியிருக்க இயலும் என்ற கேள்விக்கு ஏ.டி.எஸ். பதில் சொல்லியாக வேண்டும்.

புனே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி என்று சந்தேகப்படுகின்ற யாசீன் பட்கலின் சகோதரர் மற்றும் இந்திய முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கலின் ஊர்காரர் என்ற இரண்டு தொடர்பை தவிர அப்துஸ் ஸமதுவிற்கு புனே குண்டுவெடிப்பில் என்ன தொடர்பு உள்ளது என்பதை ஏ.டி.எஸ். நிரூபித்தாக வேண்டும். அப்துஸ் ஸமது பட்கலை கைதுச் செய்து 24 மணிநேரம் விசாரணைக்கு பிறகு மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை அவர் மீது ஆயுதச் சட்டத்தை பிரயோகித்து நீதிமன்றத்தில் முன்நிறுத்தினர். அவர் மீது குண்டுவெடிப்பு வழக்கை அவர்களால் சுமத்த இயலவில்லை என்று ஹெட்லைன்ஸ் டூடே தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.

தனது யாஹு மின்னஞ்சல் மூலம் அப்துஸ்ஸமது அனுப்பிய இரண்டு அஞ்சல்கள் தான் அவர் குண்டுவெடிப்பு நடைபெற்ற தினத்தில் புனேயில் இருந்ததற்கான ஆதாரம் என்று கூறப்படுகின்றது. ஆனால் அதற்கான தடயம் எதனையும் ஏ.டி.எஸ்.சினால் திரட்ட இயலவில்லை. மேலும் அப்துஸ் ஸமது பயன்படுத்திய செல்பேசிகளும் அப்துஸ் ஸமது குண்டுவெடிப்பில் ஈடுபட்டதற்கான தடயத்தை அளிக்கவில்லை என்றும் ஹெட்லைன்ஸ் தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.

குற்றவியல் நடுவர் முன்பு அப்துஸ் ஸமது பட்கலை ஆஜர்படுத்தும் போது அவர் மீது புனே குண்டுவெடிப்பு குற்றச்சாட்டை சுமத்தாமல் சென்ற ஆண்டு பைகுலாவில் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டை மட்டுமே ஏ.டி.எஸ். சுமத்தி அவரை தங்கள் விசாரணை காவலுக்கு எடுக்க அனுமதி பெற்றனர்.

மும்பையில் அப்துஸ் ஸமது பட்கலின் தாயார் பீபீ ரேஹானா. அவரது மாமா முஹம்மது இப்றாஹீம் மற்றும் மாமி சி.ஹலிமா ஆகியோர் தங்கள் வீட்டு பிள்ளை மீது அநியாயமாக காவல்துறை புனே குண்டு வழக்கையும், ஆயுத வழக்கையும் புனைந்திருப்பதாக குற்றஞ்சாட்டினர்.

கர்நாடக மாநிலம் பட்கல் மாவட்டம் மக்தூம் காலனியைச் சேர்ந்த அப்துஸ் ஸமது பட்கலுக்கு ஆதரவாக அவரது கிராம மக்களும் திரண்டுள்ளனர்.

பெங்களுரில் அப்துஸ் ஸமது கணிணி கற்று வந்ததாகவும் அவருக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லை என்று அக்கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

ஜுலை 2008ல் பெங்களுரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்காக கைதுச் செய்யப்ட்ட அப்துஸ்ஸமது பிறகு ஆதாரமில்லை என்பதால் விடுவிக்கப்பட்டார். இதன் பிறகே அவர் துபாய் சென்றார்.

அப்பாவி முஸ்லிம்களை கைதுச் செய்து சிறையில் அடைத்து விட்டு உண்மை குற்றவாளிகளை தப்ப விடும் இந்த கொடுஞ்செயல்கள் என்று முடியுமோ?

அபினவ் பாரத் என்ற சங் பயங்கரவாதக் கும்பலின் தலைமையகம் புனே என்பதை மட்டும் ஏன் ஏ.டி.எஸ். மறந்து விடுகின்றது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புனே குண்டுவெடிப்பு:கைது செய்யப்பட்ட அப்துஸ்ஸமது பட்கல் அப்பாவி? வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்"

கருத்துரையிடுக