9 மே, 2010

ஜோதிடம் தொன்மையான அறிவியல் அதனை தடைச்செய்ய முடியாது- மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

ஜோதிடம் என்பது தொன்மையான அறிவியல். அதை தடைச் செய்ய முடியாது என்று மத்திய அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் பதில் கூறியுள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில்,மருந்து மற்றும் மாயா ஜால சிகிச்சை (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்)சட்டம்1954இன் படி, ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தை தடைச்செய்யக் கோரி,பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

அதன் விசாரணையில்,மத்திய அரசின் துணை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ராம கிருஷ்ணன் பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

'ஜோதிடம் என்பது நான்காயிரம் ஆண்டுகளாக நடைமுறையிலிருந்து வருகிறது அது காலக்கணிப்பை அடிப்படையாகக் கொண்டது, அதை தவறாக கருதுகின்றனர். ஜோதிடத்தை தடைச்செய்ய முடியாது நாட்டின் அரசமைப்பு போற்றும் மதச்சார்பற்ற தன்மைக்கு ஜோதிடம் குறித்த படிப்பு இருக்காது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும் மருந்து சூமந்திரக்காளி மாயாஜால சிகிச்சைகள் குறித்த சட்டத்தின் வரையறையில் ஜோதிடமும் அதன் தொடர்பானவையும் வராது. கருவை தடைச்செய்தல், பாலியல் சக்தியை அதிகரித்தல் போன்ற அறிவியலுக்கு புறம்பான விஷயங்கள் குறித்த விளம்பரங்கள் தான் அச்சட்டத்தின் கீழ் வரும்.' இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை தொடுத்தவர் பகவன்ஜி ராயானி என்பவர். தன் மனுவில் பிரபல ஜோதிடர் ஞாபெஜன் தருவாலா மற்றும் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் பலரையும் இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி கருத்தறிய கேட்டு கொண்டிருக்கிறார்.ஆனால் அவர்கள் பலரும் மனுத்தாக்கல் செய்யாததால் இவ்வழக்கின் மீதான விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜோதிடம் தொன்மையான அறிவியல் அதனை தடைச்செய்ய முடியாது- மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்"

கருத்துரையிடுக