20 மே, 2010

நபிகளாரின் கேலிச்சித்திரம் வரையும் போட்டியை அறிவித்த ஃபேஸ்புக்கிற்கு பாகிஸ்தானில் தடை

இஸ்லாமாபாத்:அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்...)அவர்களை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் வரையும் போட்டியை அறிவித்த ஃபேஸ் புக்கிற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

caricatures என்றழைக்கப்படும் கேலிச்சித்திரங்களை போஸ்ட் செய்ய ஃபேஸ் புக் தனது பயனீட்டாளர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்தது. ஏராளமானோர் இத்தகைய கேலிச்சித்திரங்களை வரைந்து அனுப்பவும் செய்தனர்.

ஃபேஸ்புக்கின் இத்தகைய நடவடிக்கை முஸ்லிம் சமுதாயத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாகவும், இதற்கெதிராக எதிர்ப்பு எழவேண்டும் எனக்கூறி பாகிஸ்தானில் இஸ்லாமிக் லாயர்ஸ் மூவ்மெண்ட் என்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் ஃபேஸ் புக்கிற்கு தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக்கிற்கு நோட்டீஸ் அளிக்க தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.

நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் ஃபேஸ்புக்கிற்கு தடை ஏற்படுத்தியதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாகிஸ்தானில் 4.5 கோடி ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் உள்ளனர். 'முஹம்மது டே' என்ற பக்கத்திற்கு 40000 நபர்களின் ஆதரவு உள்ளது. அதற்கெதிரான பக்கத்திற்கு 53,000 நபர்களின் ஆதரவு உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நபிகளாரின் கேலிச்சித்திரம் வரையும் போட்டியை அறிவித்த ஃபேஸ்புக்கிற்கு பாகிஸ்தானில் தடை"

கருத்துரையிடுக