காபூல்:ஆப்கானிஸ்தானில் முக்கிய அமெரிக்க ராணுவ முகாமான பக்ராமில் தாலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது அமெரிக்க ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அதிகாலை மூன்று மணிக்கு காபூலின் அருகிலிலுள்ள பக்ராமில் தாக்குதல் நடந்தது. காரில் வந்த 13 உறுப்பினர்களைக் கொண்ட போராளிகள் முகாமில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 7 போராளிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் கூறுகிறது. ஆறுபேர் தப்பினர்.
ராணுவ முகாமுடன் சட்டத்திற்கு புறம்பான சிறைக்கொட்டகையும் பக்ராமில் உள்ளது. தாக்குதலுக்கான பொறுப்பை தாலிபான் ஏற்றுக் கொண்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை நேட்டோ வாகனங்களின் மீது நடந்த தாக்குதலில் ஆறு நேட்டோ அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆப்கான்:பக்ராம் அமெரிக்க முகாமில் தாலிபான் தாக்குதல்"
கருத்துரையிடுக