20 மே, 2010

அமெரிக்க ராணுவத்தினரில் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

வாஷிங்டன்:மனநோயின் காரணமாக சிகிச்சை பெறும் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெண்டகனின் புதிய புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

போரில் காயமடைந்தவர்களை விட மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெண்டகன் கூறுகிறது.

புள்ளிவிபரப்படி கடந்த 2009 ஆம் ஆண்டு தாக்குதலில் காயமேற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ராணுவத்தினர் 17,354 ஆகும். ஆனால் மனநோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 17, 538 பேர்களாவர்.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டுவரும் அமெரிக்க ராணுவத்தினரிடையேதான் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நோயின் காரணமாக நாட்டிற்கு திரும்பிச் சென்ற பிறகும் ராணுவத்தினருக்கு பழைய வாழ்க்கைக்கு திரும்ப இயலவில்லை.
காயங்களால் ஏற்படும் நோய், போதைப் பொருள்களுக்கு அடிமையாகுதல், மனத்துயரம், பீதி ஆகிய பிரச்சனைகள் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பும் ராணுவத்தினரிடம் காணப்படுகிறது.

இவர்களின் சிகிச்சைக்காக ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை செயலாளர் ரோபர்ட் கேட்ஸ் தெரிவிக்கிறார். பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி இத்தகைய பிரச்சனைகளுக்கு செலவழிப்பதால் நஷ்டபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

தரைப்படையில் 10 சதவீத ராணுவத்தினரும் மனோவியாதி சிகிச்சையில் உள்ளதாக பெண்டகன் அறிக்கை தெரிவிக்கிறது. கப்பற்படை மற்றும் விமானப்படையிலும் நிலைமை சீராக இல்லை.

மனநோயின் காரணமாக தற்கொலைச் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்கொலைச் செய்வோரின் புள்ளிவிபரங்களை சேகரித்து வருவதாக ரகசிய புலனாய்வு அதிகாரி கார்ல் ஓஸ்குட் தெரிவிக்கிறார்.

ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் 1,40,000 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளனர். இதில் கடந்த ஆண்டும் மட்டும் மருத்துவமனையில் மனோவியாதியின் காரணமாக சிகிச்சைப் பெற்றவர்கள் 10,222 பேர்களாகும்.

ஒவ்வொரு நாளும் 3000 டாலர் இத்தகைய ராணுவத்தினரின் சிகிச்சைக்காக செலவழிப்பதாக ராணுவம் ஏற்கனவே கூறியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க ராணுவத்தினரில் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு"

கருத்துரையிடுக