இந்திய கடல் பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஈரானிய நிறுவனம் பெற்றுள்ளது.
ஈரானைச் சேர்ந்த ஆஃப்ஷோர் இன்ஜினீயரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் (ஐஓஇசி) நிறுவனம் ரூ. 1,035 கோடி மதிப்பிலான டெண்டரை நிறைவேற்ற உள்ளது.
எஸ்ஸார் நிறுவனம் நிலப் பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணியை மேற்கொள்வதற்கு லைசென்ஸ் பெற்றுள்ளது. ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்றும் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. டி-1 பகுதியில் இந்த திட்டப் பணியை ஐஓஇசி மேற்கொள்ளும்.
இந்தப் பகுதியினது மும்பையிலிருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பணியை 12 மாதங்களில் நிறைவேற்றித் தர வேண்டும் என்ற ஒப்பந்தமும் அளித்துள்ளது.
நிலப் பகுதியில் இத்தகைய பணியை நிறைவேற்றித் தர தேர்வு செய்யப்பட்ட முதலாவது ஈரானிய நிறுவனம் ஐஓஇசியாகும்.
அகழ்வுப்பணி தவிர, எரிபொருளை எடுத்துச் செல்வதற்கான குழாய்ப்பாதைகளை வடிவமைத்து அளிக்கும். இதுபோன்ற ஒப்பந்தங்களை நிறைவேற்றித் தர இந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
கடல் பகுதி மற்றும் நிலப் பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணியை மேற்கொள்வதில் இந்நிறுவனம் முன்னணியில் விளங்குகிறது.

dinamani
0 கருத்துகள்: on "இந்திய கடல் பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணி: ஈரான் நிறுவனத்துக்கு ஆர்டர்"
கருத்துரையிடுக