25 மே, 2010

மங்களூர் விமான விபத்துக்கு விமானியே காரணம்- முதல்கட்ட தகவல்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் தவறே காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக மங்களூரில் நிபுணர்கள் குழு முகாமிட்டுள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டி உள்ளிட்ட முக்கிய கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து உண்மை அறிய இந்த கருப்பு பெட்டி மற்றும் கருவிகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

விபத்துக்குள்ளான விமானம் இரண்டரை ஆண்டுக்கு முன் வாங்கப்பட்டது. அது முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளதால், விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால்,தரை இறங்கும்போது விமானி செய்த தவறு அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும் என்ற இரு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

மங்களூர் விமான நிலையம் ஓடுபாதை தொடங்கும், முடிவடையும் இடத்தில் பெரிய பள்ளம் உண்டு. இந்தியாவில் உள்ள ரிஸ்க்கான விமான நிலையங்கள் பட்டியலில் மங்களூர் இடம் பெற்றுள்ளது. இதனால், விமானி சாதுரியமாக செயல்பட்டால்தான் விமானத்தை பத்திரமாக தரை இறக்க முடியும். விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி குலுசிக், 10,000 மணி நேரத்துக்கும் அதிகமாக விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர். செர்பிய நாட்டைச் சேர்ந்த அவர் ஏற்கனவே பல முறை மங்களூர் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

விமானியுடனான உரையாடல் விமான கட்டுப்பாட்டு அறையில் பதிவாகி இருக்கும். அந்த கேசட்டை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நடந்தபோது விமான கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரித்தனர். விமானத்தை தரையிறக்க உதவும் கருவிகள் ஒழுங்காக இயங்குகிறதா என்று விசாரணை குழுவினர் ஆய்வு செய்து விவரங்களை சேகரித்துள்ளனர். முதல் கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், விமானியின் தவறு காரணமாகவே விபத்து நடந்திருக்கும் என்று தெரிய வந்திருப்பதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன. மங்களூர் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கும்போது, முதலில் வழிகாட்டும் கருவிகளின் உதவியோடு விமானத்தை இயக்கலாம். விமான நிலையத்துக்கு 800 மீட்டர் தூரம் மட்டுமே இருக்கும்போது விமானத்தை தன் முழு கட்டுப்பாட்டில் விமானி கொண்டு வரவேண்டும்.

ஆனால், விபத்து நடந்தபோது, விமானம் தரைஇறங்க தொடங்கிய பிறகே விமானத்தை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் விமானி குலுசிக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் தரை இறங்க வேண்டிய இடத்தை தாண்டி விமானம் தரையிறங்கி உள்ளது.

விமானத்தை தவறுதலாக தரை இறக்கிவிட்டோம் என்பதை உணர்ந்த விமானி குலுசிக் திடீரென பிரேக் போட டயர் வெடித்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்க வாய்ப்பு உள்ள விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.

முதல் கட்ட விசாரணையில் தகவல்
விமானியுடனான உரையாடல் விமான கட்டுப்பாட்டு அறையில் பதிவாகி இருக்கும். அந்த கேசட்டை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நடந்தபோது விமான கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரித்தனர். விமானத்தை தரையிறக்க உதவும் கருவிகள் ஒழுங்காக இயங்குகிறதா என்று விசாரணை குழுவினர் ஆய்வு செய்து விவரங்களை சேகரித்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், விமானியின் தவறு காரணமாகவே விபத்து நடந்திருக்கும் என்று தெரிய வந்திருப்பதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன. மங்களூர் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கும்போது, முதலில் வழிகாட்டும் கருவிகளின் உதவியோடு விமானத்தை இயக்கலாம்.

விமான நிலையத்துக்கு 800 மீட்டர் தூரம் மட்டுமே இருக்கும்போது விமானத்தை தன் முழு கட்டுப்பாட்டில் விமானி கொண்டு வரவேண்டும். ஆனால், விபத்து நடந்தபோது, விமானம் தரைஇறங்க தொடங்கிய பிறகே விமானத்தை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் விமானி குலுசிக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் தரை இறங்க வேண்டிய இடத்தை தாண்டி விமானம் தரையிறங்கி உள்ளது. விமானத்தை தவறுதலாக தரை இறக்கிவிட்டோம் என்பதை உணர்ந்த விமானி குலுசிக் திடீரென பிரேக் போட டயர் வெடித்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்க வாய்ப்பு உள்ள விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மங்களூர் விமான விபத்துக்கு விமானியே காரணம்- முதல்கட்ட தகவல்"

கருத்துரையிடுக