தென்அமெரிக்க கண்டத்தில் பசிபிக் பிராந்தியத்தில் பெருநாடு உள்ளது. தலைநகரான லிமாவில் இருந்து தென்கிழக்கேயுள்ள தெற்கு ஆயாகுசோ என்ற இடத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் லேசான கீறல்கள் ஏற்பட்டன.
இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் பெரு நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்டது.
பெரு நாட்டை தொடர்ந்து மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வனுவாத் நாட்டில் இன்று காலை 7.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகரான போர்ட்-விலா அருகே கடலுக்கு அடியில் இது ஏற்பட்டது.
இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் மக்கள் பீதியுடன் காணப்பட்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோமா, அமெரிக்கன் சோமா, தொங்கா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டது. அதில் 184 பேர் உயிரிழந்தனர்.

z9world
0 கருத்துகள்: on "பெரு நாட்டில் நில நடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்"
கருத்துரையிடுக