24 மே, 2010

மங்களூர் விமானவிபத்து:எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அனுதாபம்

துபாய்:வெளிநாட்டு வாழ் இந்தியர் நல அமைப்பாக ஐக்கியர் அரபு அமீரகத்தில் செயல்பட்டுவரும் சமூக நல அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்கிடையானதில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "விமானவிபத்தில் இறந்தவர்களின் மஃபிரத்துக்காக நாங்கள் வல்ல இறைவனிடம் தாழ்மையுடன் பிரார்த்திக்கிறோம். மேலும் இறைவன் இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு உறுதியையும், பொறுமையையும் அளித்தருள்வானாக!

பாஜ்பே விமானநிலையம் இதர விமானநிலையங்களோடு ஒப்பிடுகையில் தரம் குறைவான நிலையில் உள்ளதாகும். இந்த விபத்துமூலம் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடமிருந்து விமானநிலையத்தின் பாதுகாப்பு தரத்திற்காக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை". இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
செய்தி:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மங்களூர் விமானவிபத்து:எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அனுதாபம்"

கருத்துரையிடுக