24 மே, 2010

பாகிஸ்தான் குடிமகனை மீண்டும் சிறையிலடைத்தது சிலி

சாண்டியாகோ:சிலி நாட்டில் அமெரிக்க தூதரகத்தில் வெடிப்பொருட்களுடன் நுழைந்தார் என குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான பாகிஸ்தான் குடிமகன் ஸைஃபுர் ரஹ்மானை மீண்டும் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்திற்கு 27வயதான ஸைஃபுர் ரஹ்மான் வெடிப்பொருட்களுடன் வரவில்லை என்பதை அறிந்த நீதிமன்றம் ஏற்கனவே அவரை விடுதலைச் செய்திருந்தது.

ஆனால் இவரை விடுதலை செய்வது தேசப்பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் என சிலி நாட்டின் உள்துறை அமைச்சகம் அட்டர்னி ஜெனரல் வழியாக கோர்ட்டில் தெரிவித்ததைத் தொடர்ந்து ஸைஃபுர் ரஹ்மானை மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாண்டியாகோவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் டூரிஸம் மேனேஜ்மெண்ட் படிப்பிற்காக வந்த ஸைஃபுர் ரஹ்மானை அமெரிக்க தூதரகத்திற்கு அழைத்து வெடிப்பொருட்களுடன் வந்ததாக கூறி கைது செய்திருந்தனர். ஆனால் அதனை நிரூபிக்க அரசு தரப்பால் இயலாததால் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தான் குடிமகனை மீண்டும் சிறையிலடைத்தது சிலி"

கருத்துரையிடுக