24 மே, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மதிய ஓய்வு மூன்று மாதமாக அதிகரிப்பு

துபாய்:யு.ஏ.இயில் இவ்வாண்டு முதல் தொழிலாளர்களுக்கு கோடைக்கால மதிய ஓய்வு 3 மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வருகிற ஜூன் 15 ஆம் தேதி முதல் துவங்கி 3 மாதம் நீடித்திருக்கும். இதனை ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில் அமைச்சர் ஸகர் கோபாஸ் தெரிவித்தார்.

தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக விரிவான ஆய்வு மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சூட்டின் கடுமை அதிகமாகயிருக்கும் மதியம் 12.30மணி முதல் 3.00 மணிவரை ஓய்வு நேரம் அனுமதிக்கப்படும். தொழில் நுட்பத்தின் காரணமாக பணியை நிறுத்த முடியாத நிறுவன பிரிவுகளின் பட்டியலை தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

3 மணிநேர மதிய ஓய்வை வழங்குவதற்கு காண்ட்ராக்ட் கம்பெனிகளின் அசோசியனிடமிருந்து ஆதரவான நிலைப்பாடு கிடைத்துள்ளது.

இம்முறை மதிய ஓய்வை செயல்படுத்தாத நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாகயிருக்கும் என தொழில் அமைச்சர் தெரிவித்தார்.

சூட்டிலிருந்து பாதுகாக்கும் அனைத்து வசதிகளையும் தொழிலாளிகளுக்கு அளித்திருக்க வேண்டும்.தொழில் சட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் தொழிலாளிகளுக்கு புரியும் மொழியில் விளக்கியிருக்க வேண்டும்.குடிப்பதற்கான குளிர்ந்த தண்ணீர் ஏற்பாடுச் செய்திருக்க வேண்டும்.

சட்டத்தை மீறுவதை கண்டறிவதற்காக பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சகத்தின் செயல் இயக்குநர் ஜெனரல் ஹுமைத் பின் திமாஸ் தெரிவித்தார்.

முதலில் சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு 10ஆயிரம் திர்ஹம்ஸ் அபாராதமும், மீண்டும் சட்டத்தை மீறினால் 20ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதமும் 6மாதங்களுக்கு புதிய விசாக்கள் அளிப்பது நிறுத்தியும் வைக்கப்படும்.

மூன்றாவது முறையும் சட்டத்தை மீறினால் 30ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதமும், ஒரு வருடத்திற்கு புதிய விசாக்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மதிய ஓய்வு மூன்று மாதமாக அதிகரிப்பு"

கருத்துரையிடுக