பாக்தாத்:ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் ரகசியமாக செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என சர்வதேச போர் எதிர்ப்பு அமைப்பான வார் அண்ட் பீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தினர் தற்பொழுதும் ஈராக்கில் கொல்லப்படுவது இதற்கு ஆதாரமாகும் என நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு கூறுகிறது.
ஈராக்கிலிருந்து வாபஸ் பெறுவதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு விஷயங்களை ஈராக் ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு ராணுவ முகாம்களுக்கு சென்ற அமெரிக்க ராணுவம் முகாமிற்கு வெளியேயும் பல இடங்களில் கொல்லப்படுவது தொடர்கிறது.
இதன் மூலம் அவர்கள் தற்பொழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை தெரிவிப்பதாக வாட் அண்ட் பீஸின் இயக்குநர் கெவின் சாண்டர்ஸ் தெரிவிக்கிறார்.
2008 ஆம் ஆண்டு பாக்தாதிற்கும், வாஷிங்டனுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 2009 முதல் தாக்குதல்கள் நடத்துவதை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
நேற்று முன்தினம் ஈராக்கில் இரண்டு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். எண்ணெய் தொடர்பான செயல்பாடுகளில்தான் அமெரிக்க ராணுவம் பெரும்பாலும் ஈடுபடுவதாக கெவின் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் ரகசியமாக செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்- சர்வதேச போர் எதிர்ப்பு அமைப்பு"
கருத்துரையிடுக