24 மே, 2010

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதனால் அதிக இருதய நோய் ஏற்படுகிறது

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை உட்கொள்வதனால் அதிகளவு இருதய நோய் ஏற்படுவதாக நவீன மருத்து ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சொசேஜஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளினால் அதிகளவு இருதய நோய் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

பச்சை இறைச்சி வகைகளினால் அதிகளவு பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஹாவார்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்ளினால் ஒரு மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாள் தோறும் 50 கிராம் அளவு பதப்படுத்திய இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோயும் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பதப்படுத்தப்படாத பச்சை இறைச்சி வகைகளான மாடு, ஆடு போன்ற இறைச்சி வகைகளை உட்கொள்வோருக்கு நீரிழிவு நோய் ஏற்படக் கூடிய அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது.

இரண்டு இறைச்சி வகைகளிலும் ஒரேயளவு கொழும்பு சத்தே காணப்படுவதாகத் தெரவிக்கப்படுகின்றது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதனால் அதிக இருதய நோய் ஏற்படுகிறது"

கருத்துரையிடுக