5 மே, 2010

உண்மை கண்டறியும் சோதனை,நார்கோ அனாலிசிஸ் சோதனையை நடத்துவது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம்

டெல்லி: உண்மை கண்டறியும் சோதனை, மூளை வரைபட சோதனை, நார்கோ அனாலிசிஸ் போன்றவற்றை நடத்துவது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளிடம் இருந்து பெறும் வாக்குமூலம் உண்மையானதுதானா என்பதை அறிந்து கொள்வதற்காகவும் குற்றவாளிகளிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெறுவதற்காகவும் காவல்துறையினர் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இச்சோதனை காரணமாக குற்றவாளிகளுக்கு உடல்நலக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக சர்ச்சை இருந்து வந்தது.

இந்நிலையில் உண்மை கண்டறியும் சோதனை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஒருவரை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், இது தனி மனித சுதந்திரத்தில் தேவையற்ற தலையீடு எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உண்மை கண்டறியும் சோதனை மூலம் பெறப்படும் தகவல்களை சாட்சியமாகவோ, ஆதாரமாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உண்மை கண்டறியும் சோதனை,நார்கோ அனாலிசிஸ் சோதனையை நடத்துவது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம்"

கருத்துரையிடுக