22 மே, 2010

யு.எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறை தீவிரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக திகழ்கிறது –ஈராக் மூத்த இராணுவ அதிகாரி

பாக்தாத்:ஈராக்கில் செயல்படும் யு.எஸ்ஸின் விசாரணை (detention unit) சிறை, குற்றங்களை குறைப்பதற்கு வழிவகுக்காமல் குற்றங்களை அதிகரிக்கச் செய்கின்றது என்று ஈராக் ராணுவ மூத்த அதிகாரி மேஜர் ஜெனரல் காசிம் அட்டா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இச்சிறைகள் தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

கைது செய்யப்படும் பெரும்பாலானோர், அச்சிறைகளிருந்து விடுதலை ஆகிய பிறகு பெரிய அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு யு.எஸ். ராணுவ பிரிகாடியர் டேவிட் கோன்டோக் குறிப்பிடுகையில், ஈராக்கில் உள்ள யு.எஸ். சிறைகளில் நடக்கும் செயல்கள் தனக்கு வேதனை அளிப்பதாக கூறியிருந்தார்.

2009 ஆகஸ்ட்30 வரை, சுமார் 9000 ஈராக்கியர்களை தீவிரவாதிகள் என்று யு.எஸ் ராணுவம் கைது செய்தது. 2008ல் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி, யு.எஸ் அக்கைதிகளை ஈராக் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் ஆனால் அப்படி செய்யவில்லை.

ஈராக் ராணுவ அதிகாரியின் இக்குற்றச்சாட்டுகள் மற்றும் யு.எஸ் ராணுவ அதிகாரியின் முந்தைய கருத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் யு.எஸ் இச்சிறைகளின் மூலம் தீவிரவாதிகளை உற்பத்தி செய்கின்றதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
source:Siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யு.எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறை தீவிரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக திகழ்கிறது –ஈராக் மூத்த இராணுவ அதிகாரி"

கருத்துரையிடுக