22 மே, 2010

இஸ்ரேலிய அணுஆயுதத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் –துருக்கி

அணுஆயுத விவகாரத்தில் ஈரானின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் இப்போது உலக நாடுகள் இஸ்ரேலின் ஆணுஆயுதங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று துருக்கி பிரதமர் தய்யிப் ஏர்டோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

"உண்மையை சொல்லப் போனால் ஈரானில் எந்த விதமான அனுஆயுதமும் இல்லை ஆனால் இஸ்ரேல் எங்கள் வளைகுடாவில் தான் உள்ளது" ஈரானும், இஸ்ரேலும் துருகியிலிருந்து சம தூரத்திலேயே இருக்கின்றன" என்று தய்யிப் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச சமுகம் இஸ்ரேலுக்கெதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இது தான் சட்டத்தின் மேன்மையா அல்லது உலகத்தை ஆட்டிபடைகின்றவர்களின் மேன்மைத் தனமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த 1980ம் ஆண்டு, இஸ்ரேலிய அணுஆயுத அதிகாரி மோர்தேசை வனுனு அளித்த தகவலின் அடிப்படையில், இன்று இஸ்ரேலிடம் 100 முதல் 200 வரையிலான அணுஆயுதங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய கிழக்கில் கடந்த 60ஆண்டுகளாக போர் குற்றங்கள் புரிந்து வரும் இஸ்ரேல், இது வரை அணுஆயுத விவகாரத்தில் ஒரு குழப்பமான சூழலையே உருவாக்கியுள்ளது.

சர்வேதேச அணுஆயுத கண்காணிப்பாளர்களையும் இஸ்ரேல் சோதனைக்காக அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source:PressTV

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலிய அணுஆயுதத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் –துருக்கி"

கருத்துரையிடுக