மங்களூர்:துபாயிலிருந்து மங்களூருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வேயில் இறங்கும் பொழுது தீப்பிடித்ததில் விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் மரணித்தவர்களில் 19 பேர் குழந்தைகளாவர். மொத்தம் 169 பேர் இவ்விமானத்தில் பயணம் செய்துள்ளனர். 6 பேர் காயங்களுடன் சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





கர்நாடகா அமைச்சர் 60பேர் மரணித்திருக்கலாம் எனக் கூறுகிறார். மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 6.30 மணிக்கு இவ்விபத்து நடந்துள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
நேற்று இரவும், இன்று காலையிலும் மழைப்பெய்துள்ளது விமான நிலைய ரன்வேயில் உள்ள குழியில் சிக்கிய விமானம் தடுமாறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
0 கருத்துகள்: on "மங்களூரில் விமான விபத்து:169 பேரின் கதி என்ன?"
கருத்துரையிடுக