22 மே, 2010

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் பின்னணியிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்- சி.பி.ஐ

புதுடெல்லி:மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலை குண்டுவைத்து தகர்த்தவர்கள் அஜ்மீர் தர்காவிலும், மக்கா மஸ்ஜிதுலும் குண்டுவைத்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தான் என முக்கியமான ஆதாரம் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.

சம்ஜோதா,அஜ்மீர், ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு வெடிப்பொருட்கள் இந்தூரிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.இம்மூன்று இடத்திலும் ஒரேமாதிரியான டெக்னிக் கையாளப்பட்டுள்ளது. இதனை சி.பி.ஐயின் டைரக்டர் அஸ்வினிகுமார் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புகளுக்கு இடையேயான தொடர்புகளைக் குறித்து சி.பி.ஐ உள்ளிட்ட ஏஜன்சிகள் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அஜ்மீர்,மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகளான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தேவேந்திர குப்தா, சந்திரசேகர் பரோட் ஆகியோரை ஹரியானா தீவிரவாத எதிர்ப்பு படையினரும்,சி.பி.ஐயும் இணைந்து விசாரிக்கத் துவங்கியுள்ளன.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புக் குறித்து கூடுதல் விபரங்கள் கிடைப்பதற்காக ஒருங்கிணைந்த விசாரணை துவங்கியுள்ளதை சி.பி.ஐ இயக்குநர் உறுதிப்படுத்தினார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் சூட்கேஸ் பூட்டுகள்தான் குண்டுவெடிக்க வைக்கும் ட்ரிகராக பயன்படுத்தப்பட்டது.

2007 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 2007 ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதுலும், 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் அஜ்மீரிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் இதேமாதிரியான முறையில் நிகழ்த்தப்பட்டன என சி.பி.ஐ டைரக்டர் சுட்டிக் காட்டுகிறார்.

ஒன்றோடு ஒன்று இணைந்த இரும்பு பைப்புகளை ஒரே வரிசையில் அடுக்கிவைத்து அதன் உட்புறத்தில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. சிறிய சூட்கேஸ் பூட்டுதான் மூன்று இடங்களிலும் தூண்டு விசையாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஹரியானா ஏ.டி.எஸ்ஸால் கடந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும் இவ்வழக்கில் ஒரு துரும்பையும் கண்டறிய இயலவில்லை.

மக்காமஸ்ஜித், அஜ்மீர் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகளை கைது செய்ததோடு முக்கியமான ஆதாரம் கிடைத்தது.

குண்டுவெடிப்புகளுக்கிடையேயான தொடர்புகளை சி.பி.ஐ ஏ.டி.எஸ்ஸிடம் தெரிவித்திருந்தது.இதனைத் தொடர்ந்துதான் ஹரியானா ஏ.டி.எஸ் சி.பி.ஐயுடன் இணைந்து விசாரனையை துவக்கியுள்ளது.

அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான அபினவ் பாரத் சங்காதன் உறுப்பினர்களை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் சமீபத்தில்தான் கைது செய்திருந்தது.

அஜ்மீரில் பீஹாரி கஞ்சியைச் சார்ந்த தேவேந்திர குப்தா முதலில் கைது செய்யப்பட்டார். மலேகான் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளி சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூருடன் இவருக்கு தொடர்பிருப்பதாக ராஜஸ்தான் ஏ.டி.எஸ் தலைவரும் ஏ.டி.ஜி.பியுமான கபில் கார்க் தெரிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடனான தொடர்பும் வெட்ட வெளிச்சமானது.

கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி குண்டுவெடிப்பிலும் இவர்களுக்கு பங்குண்டு என புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இத்தகைய குண்டுவெடிப்பு வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) ஏற்கவேண்டும் என பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன.

இந்நாட்டில் நடைபெற்ற சிறிய அளவிலான குண்டுவெடிப்பு வழக்குகளையெல்லாம் ஏற்றெடுத்த என்.ஐ.ஏ இவ்வழக்குகளில் மட்டும் ஆர்வம் காட்டாமலிருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அஜ்மீர் குண்டுவெடிப்பின் பெயரில் கைது செய்யப்பட்ட ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் தற்பொழுதும் சிறையில் வாடுகின்றனர். இவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்கி விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் பின்னணியிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்- சி.பி.ஐ"

கருத்துரையிடுக