25 மே, 2010

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தடங்கல் நம்பிக்கை குறைவு மன்மோகன்சிங்

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்குவதில் உள்ள முக்கியமான தடங்கல் என்பது நம்பிக்கைக் குறைவுதான் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஆயினும்,இந்தியா எல்லா வழிகளிலும் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மன்மோகன் சிங் கூறினார்.

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில் திங்களன்று புது டெல்லியில் செய்தியாளர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்த வேளையில் அவர் இதனை தெரிவித்தார்.

மன்மோகன் சிங்கின் இந்தக் கருத்துகள் ஒரு சாதகமான திருப்பம் என்று கூறிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ஆனால், பரஸ்பரம் நம்பிக்கை குறைந்துள்ளது என்பதில் சந்தேகமேயில்லை என்றும் கூறியிருக்கிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தடங்கல் நம்பிக்கை குறைவு மன்மோகன்சிங்"

கருத்துரையிடுக