பெங்களூர்:ஓவியக் கலைஞராக நடித்து டெஹல்கா ரிப்போர்டர் ஸ்ரீராமசேனா தலைவர் பிரமோத் முத்தலிக்கிடமும் அவருடைய சகாக்களிடமும் நடத்திய உரையாடல் ரகசிய கேமராவின் மூலம் பதிவுச் செய்யப்பட்டது. அந்த உரையாடலின் முக்கிய பகுதிகள்.
டெஹல்கா:எனக்கு தேவை நான் பிரபலமடைய வேண்டும். அப்பொழுதுதான் எனது பிசினஸ் வளர்ச்சியடையும். (எக்ஸிபிஷன் ஹால் மீதான் தாக்குதலில்) எத்தனை பேர் கலந்துக் கொள்வார்கள். வழக்கறிஞருக்கான ஃபீஸ் உள்ளிட்டவைக்களுக்காக எவ்வளவு தொகை அட்வான்ஸாக் வேண்டும் என்பவைத்தான் எனக்கு தெரிய வேண்டியது.
முத்தலிக்:மங்களூரிலோ அல்லது பெங்களூரிலோ வைத்து நடத்தலாம்.
டெஹல்கா:பெங்களூரில் சிவாஜிநகரில் வைத்து நடத்தினால் இன்னும் பிரசித்தி பெறலாம். காரணம் அது அவர்களின்...முஸ்லிம்களின் பகுதியாகும். நீங்கள் அறிக்கையை வெளியிட்டுவிட்டு 10 நபர்களுடன் அங்கு வந்தால் போதும்.
முத்தலிக்:சரி அதனைச் செய்யலாம்.
டெஹல்கா:சார், இப்பொழுதே கூறுங்கள். இல்லாவிட்டால் நான்கு அல்லது ஐந்து தினங்கள் கழித்து வருகிறேன். 'எனக்கு இவ்வளவு செலவாகும். நீங்கள் இவ்வளவு தரவேண்டும்’ என்றுக் கூறினால் போதும். முத்தலிக்:நான் என்னக கூற வருகிறேன் என்றால்...எங்களின் அப்பகுதியின் தலைவர்...
டெஹல்கா:பெங்களூரிலா...
முத்தலிக்:ஆம் அவர் அப்பகுதியில் வலுவான நபர். நாம் மூன்றுபேரும் உட்கார்ந்து காரியங்களை தீர்மானிப்போம். என்னவானாலும் நாம் இதனை நிறைவேற்றத்தான் போகிறோம்.
(தொடர்ந்து முத்தலிக் முஸ்லிம்களைக் குறித்து ஆவேசமாக பேசுகிறார். ஹிந்துக்களை அடி பணிய வைப்பதற்கான அவர்களுடைய வழிமுறைதான் லவ்ஜிஹாத். பிராமண, ஜைன இளம் பெண்களை குறிப்பாக நோட்டமிட்டு அவர்களை சிக்க வைக்கிறார்கள். நல்ல அறிவுடைய குழந்தைகளை பெறுவதற்குதான் இது. இவ்வாறு அவரின் பேச்சு செல்கிறது.
நீங்கள் அதற்கு பதிலடிக் கொடுப்பதில்லையா? என்ற கேள்விக்கு,
’முஸ்லிம் இளம்பெண்களை காதலித்து வசப்படுத்த ஸ்ரீராமசேனா உறுப்பினர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது' என பதில் அளிக்கிறார்.
ஸ்ரீராமசேனாவின் தேசிய துணைத்தலைவர் பிரசாத் அத்தாவருடன் நடந்த உரையாடலின் முக்கிய பகுதிகள் (முதலில் மங்களூரில் ஒரு ஹோட்டல் அறையிலும், பின்னர் மங்களூர், பெல்லாரி சிறைகளிலும் வைத்து சந்திப்பு நடக்கிறது.
தாக்குதல் திட்டத்தைக் குறித்து முத்தலிக்குடன் பேசிவிட்டதால் நேரடியாக விஷயத்துக்கு நுழைந்தோம்.
கர்நாடகத்திற்கு வெளியே மும்பையிலோ, ஒரிஸாவிலோ, கொல்காத்தாவிலோ வேண்டுமென்றால் தாக்குதல் நடத்தலாம் என அத்தாவர் தெரிவித்தார்.)
டெஹல்கா:உங்களின் நண்பர் ரவி பூஜாரி (நிழலுக தாதா) மூலம் ஓவியக் கண்காட்சிக்கு எதிராக ஒரு மிரட்டல் வெளியிட்டால் தாக்குதலுக்கு இன்னும் பிரசித்தி அதிகரிக்கும்.
அத்தாவர்:உண்மைதான். எனக்கு பூஜாரியுடனான தொடர்பு மக்களுக்கு புரியும். முதலில் போலீஸை சரிக் கட்டவேண்டும்.
டெஹல்கா:அதற்கு நாங்கள் போலீசில் புகார் கொடுக்கமாட்டோமல்லவா!
அத்தாவர்:டிபார்ட்மெண்ட் தொடர்பான காரியங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். (
ஒரு நகரத்தில் தாக்குதல் நடத்த 50 லட்சம் ரூபாய் தரலாமென்று பின்னர் தொலைபேசி மூலம் டெஹல்கா ரிப்போர்டர் அத்தாவரிடம் தெரிவிக்கிறார். பின்னர் ஸ்ரீராமசேனாவின் பெங்களூர் யூனிட் தலைவர் வசந்தகுமார் பவானியுடனும் இடத்தைக் குறித்து விவாதிக்கப்பட்டது. சிட்டி மார்க்கெட்டு தான் சரியான இடம் ஏனெனில் அங்குதான் சிவாஜி நகரைவிட முஸ்லிம்கள் அதிகம் என பவானி பரிந்துரைக்கிறார்.)
டெஹல்கா:நிகழ்ச்சியில் வெளிப்படையாக தாக்குதல் நடக்க வேண்டும். வேண்டுமானால் ஒரு முஸ்லிம் தலைவரை ஓவியக் கண்காட்சிக்கு அழைக்கலாம். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்டின் பேராசிரியர் ஹுஜ்ராவையோ அல்லது வேறு எவரையேனும் அழைக்கலாம்.
பவானி:ஏன் மும்தாஸ் அலி கானை அழைக்கக்கூடாது? டெஹல்கா:யார் அவர்?
பவானி:வக்ஃப் போர்டு அமைச்சர். ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பது நல்லது. எவ்விதமான இழப்புகள் ஏற்படும் என என்னால் கூறவியலாது. இழப்பு ஏற்படும் அவ்வளவுதான். எங்களுடைய பிள்ளைகள் நல்ல வீரியமிக்கவர்கள். அவர்கள் இடப்புறம் வலப்புறம் ஒன்றும் பார்க்கமாட்டார்கள்.
பவானி:வக்ஃப் போர்டு அமைச்சர். ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பது நல்லது. எவ்விதமான இழப்புகள் ஏற்படும் என என்னால் கூறவியலாது. இழப்பு ஏற்படும் அவ்வளவுதான். எங்களுடைய பிள்ளைகள் நல்ல வீரியமிக்கவர்கள். அவர்கள் இடப்புறம் வலப்புறம் ஒன்றும் பார்க்கமாட்டார்கள்.
டெஹல்கா:அப்படியானால் அவ்வாறே நடக்கட்டும். வெளிப்படையாக தாக்குதல் நடக்கவேண்டும்.
பவானி:அதனைச் செய்யலாம். கண்ணில் கண்டவர்களையெல்லாம் அவர்கள் தாக்குவார்கள். (தொடர்ந்து வரும் வழக்குகளைக் குறித்து பேசிய பவானி பின்னர் ஃபீஸ் குறித்து பேசுகிறார்)
பவானி:ஒரு தொகையை கூறுங்கள். நான் இதுக்குறித்து முத்தலிக்கிடம் பேசுகிறேன்.
டெஹல்கா:70 லட்சம்?
பவானி:அத்தாவர் எவ்வளவு கூறினார்? அவர் இந்தத் தொகைக்கு சம்மதிக்கமாட்டாரே!
(ஸ்ரீராம சேனா அமைப்பிற்கு 5 லட்சமும், தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு 50 ஆயிரம் வீதமும், போலீஸை சரிகட்டவேண்டிய தொகையும் தரலாம் என்று ஒப்புக்கொண்டதன் மூலம் உரையாடல் நிறைவுறுகிறது. சில தினங்கள் கழித்து டெஹல்கா ரிப்போர்டர் மீண்டும் முத்தலிக்கை சந்திக்கிறார்)
முத்தலிக்:எனக்கு இதில் நேரடியாக ஈடுபடமுடியாது. சமூகத்தில் எனக்கு நல்ல இமேஜ் உள்ளது. இச்சம்பவத்தினால் அது பாழாகி விடக்கூடாது.
டெஹல்கா:60 லட்சம் ரூபாய் கடைசியில் தீர்மானிக்கப்பட்டது.
முத்தலிக்:யார் இந்தத் தொகையை கூறினார்?
டெஹல்கா:பிரசாத்
அத்தாவர்.
முத்தலிக்:பண விவகாரங்களையெல்லாம் அவர்தான் கவனிக்கிறார்.
செய்தி:தேஜஸ் நாளிதழ்
0 கருத்துகள்: on ""சமூகத்தில் எனக்கு நல்ல பெயர் உள்ளது. அதற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடாதீர்கள்""
கருத்துரையிடுக