காபூல்:கிழக்கு ஆப்கானிஸ்தானிலிலுள்ள ஜலாலாபாத்தில் நேட்டோ அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 15 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.
தந்தையும் நான்கு பிள்ளைகளும், இன்னொரு குடும்பத்தில் நான்கு பேரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் என சுர்க் சாலையின் நிர்வாக அதிகாரி முஹம்மது அரீஷ் அறிவித்தார்.
அப்பாவிகளான விவசாயிகள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவர் அசோஸியேட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார். அதேவேளையில் இந்த கொடூரத் தாக்குதலை கண்டித்து பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். நான்கஹார் மாகாணத்தில் சுர்க் சாலையில் போராட்டக்காரர்கள் டயரை எரித்து தடையை ஏற்படுத்தினர். போலீசுடன் நடந்த மோதலில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கவர்னர் அலுவலகம் அறிவித்துள்ளது.
தாக்குதல் நடந்ததை ஒப்புக் கொண்ட நேட்டோ செய்தித் தொடர்பாளர் சிவிலியன்கள் கொல்லப்பட்டதைக் குறித்து தெரியாது எனக்கூறினார். இச்சம்பவத்தைக் குறித்து விசாரிப்பதாக தெரிவித்தார். அந்நிய ஆக்கிரமிப்புப் படையினரான அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினரின் அநியாயத் தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதிக்கும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கும் இடையில் 170 ஆப்கான் சிவிலியன்கள் ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆஃப்கானில் நேட்டோ படைத்தாக்குதலில் 15 சிவிலியன்கள் படுகொலை"
கருத்துரையிடுக