வாஷிங்டன்:இஸ்ரேலின் ஏவுகணைத் திட்டத்திற்கு உதவி அளிக்க அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க 20.5 கோடி டாலர் வழங்கவேண்டும் என ஒபாமா அமெரிக்க காங்கிரஸிடம் கோரியுள்ளார். ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கங்களின் தாக்குதலை சமாளிக்க ஏவுகணைத் திட்டத்தை இஸ்ரேல் உருவாக்கி வருகிறது.
இரும்புக் கோபுரம் என பெயரிட்டுள்ள இதனை எல்லையில் நிறுவ இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் இருநாடுகளுக்கும் பொதுவான செயல்திட்டம் உள்ளதாகவும், பாதுகாப்பு விஷயத்தில் இஸ்ரேலுக்கு உதவி புரிவது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்றும் பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் ப்ரயான் விட்மேன் தெரிவித்தார்.
இஸ்ரேலில் அமெரிக்காவின் முதல் முதலீடாக இதுவாக இருக்கும். இஸ்ரேலுக்கு கடந்த ஆண்டு அமெரிக்கா அளித்த ராணுவ உதவி 255 கோடி ரூபாயாகும். 2012 ஆம் ஆண்டு இது 300 கோடியாகவும் பின்னர் 315 கோடியாகவும் அதிகரிக்கும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேலின் ஏவுகணை திட்டத்திற்கு உதவிகோரும் ஒபாமா"
கருத்துரையிடுக