16 மே, 2010

'பசியால் வாடும் இந்திய பழங்குடி கிராமங்கள்'

'படத்தில் நீங்கள் பார்க்கும் பூனம் என்ற இச்சிறுமி பசிக்கு உணவில்லாமல் அடிக்கடி புழுதி மண்ணைத் தின்று வந்ததால் மூன்று வயதிலேயே அவளுக்கு சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்து விட்டது. இருமிக்கொண்டே இருக்கும் அவளைப் போலத்தான் அலகாபாத் அருகிலுள்ள கானே என்ற பழங்குடிக் கிராமத்தில் இருக்கும் மற்ற ஏழைச் சிறுவர்களும் மண்ணைத் தின்கிறார்கள்'.

உலகில் மிக வறிய நிலையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் தான் இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

உணவு என்பது மக்களின் அடிப்படை உரிமை என்ற போராட்டம் எழுந்திருக்கும் நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை வரையறுப்பதில் புது வழியைக் கடைப்பிடித்து மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்குத் தகுதியான மக்களின் எண்ணிக்கையை பத்துக் கோடியாக அதிகரிக்க இந்திய அரசு எண்ணியுள்ளது.

ஆனால் அரசு வழங்கும் உணவுப் பொருளில் கால் பங்கு தான் உரிய மக்களைப் போய் சேர்கிறது என்றும் மோசடி திருட்டு இல்லாத வகையில் உணவு விநியோக முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய நிதியமைச்சின் தலைமைப் பொருளியல் ஆலோசகரான முனைவர். கௌஷிக்பாசு கூறுகிறார்.

அமெரிக்காவிடம் அணு ஒப்பந்தம், ஆயுத இறக்குமதி போன்ற நடவடிக்கைக்கு தீவிரமாக களமிறங்கும் இந்த அரசு பூனம் போன்ற பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களும் அனுபவிக்கும் அடிப்படை உணவுப் பிரச்சனையையும், அதற்கான போராட்டங்கள், நடவடிக்கைகள், சவால்கள் எனபவற்றையும் ஆராய்ந்து முறையான உணவு விநியோகத்தையும் அவர்களின் ஏழ்மையை போக்க இந்த முயற்சி எடுக்குமா??
source:BBC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'பசியால் வாடும் இந்திய பழங்குடி கிராமங்கள்'"

கருத்துரையிடுக