16 மே, 2010

பாப்ரி மஸ்ஜித்:மேடையிலிருந்து இரண்ட தடவை வினய்கத்தியார் என்னை வெளியே அனுப்பினார்- அஞ்சுகுப்தா

ரேய்பரேலி:பா.ஜ.க தலைவரான வினய்கத்தியார் தன்னை அத்வானி உரைநிகழ்த்திய மேடையிலிருந்து இரண்டு தடவை வெளியே அனுப்பினார் என ஐ.பி.எஸ் அதிகாரியான அஞ்சு குப்தா பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் எதிர்தரப்பு குறுக்கு விசாரணையில் தெரிவித்தார்.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கும் முன்னர் அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் உரையாற்றினர் என அத்வானியின் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி அஞ்சு குப்தா ஏற்கனவே பாப்ரி மஸ்ஜித் வழக்கு விசாரணையில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஹெச்.டி.சர்மாவின் கேள்விக்கு பதிலளிக்கையில் அஞ்சு குப்தா, "அத்வானி உரை நிகழ்த்தும் பொழுது சில நிமிடங்களே மேடையில் இருந்ததாகவும், மஸ்ஜித் இடிப்பதற்கு சற்று முன்பு என்னை அந்த இடத்திலிருந்து வினய்கத்தியார் அத்வானியின் வாகனங்களை எங்கு நிறுத்தவேண்டும் என்பது குறித்து உத்தரவிடும்படியும் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு போகச் சொன்னார்.

இந்த நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு மீண்டும் மேடைக்கு வந்தேன். அப்போது அங்கு வந்த வினய் கத்தியார், அத்வானியின் காரை மேடைக்கு அருகில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி என்னை மீண்டும் அனுப்பி வைத்தார். இதனால், சம்பவ தினத்தன்று மிகக் குறைந்த நேரம் மட்டுமே மேடையில் இருந்தேன்.

நான் மேடைக்கு வந்தபிறகு உரைகளையும், முழக்கங்களையும் கேட்டேன். அங்கே கூடியிருந்த ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. மேடைக்கும் கண்ட்ரோல் ரூமுக்கும் செல்லும் வழியில் சில சன்னியாசிகள் மத ரீதியான சடங்குகளை நடத்துவதை கண்டேன்.

அங்கு,அடையாள கரசேவை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்ட விவரம் தொடர்பான தகவல் எதுவும் எனக்கு தெரியவில்லை.

அயோத்தியில் கோயில் நிர்மாணிப்பதற்கு கரசேவையை அனுமதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது எனக்கு தெரியும்." இவ்வாறு அஞ்சு குப்தா வாக்குமூலம் அளித்தார்.

அஞ்சு குப்தா இரண்டு மணிநேரம் குறுக்கு விசாரணைச் செய்யப்பட்டார். நீதிமன்றம் வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:மேடையிலிருந்து இரண்ட தடவை வினய்கத்தியார் என்னை வெளியே அனுப்பினார்- அஞ்சுகுப்தா"

கருத்துரையிடுக