பெய்ஜிங்:அமெரிக்காவுடன் நெருங்கிய ராஜதந்திர உறவு வைத்துக் கொள்ள தாங்கள் தயாராகவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
ஆனால் நெருங்கிய ராஜதந்திர உறவை வைத்துக்கொள்ள வேண்டுமானால் தைவான், திபெத் உள்ளிட்ட எங்களின் உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா தவிர்ப்பது அவசியம் என்றும் சீனா நிபந்தனை விதித்துள்ளது.
சீனா-அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவு குறித்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடந்து வருகிறது.
இதில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவிடம் 7 பரிந்துரைகளை சீனா முன்வைத்துள்ளது. இதில் தைவான், திபெத் விவகாரங்களும் அடங்கும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் மா ஷாவோஸா தெரிவித்தார்.
இதுத்தவிர, சர்வதேச அளவில் பயங்கரவாதம், சுற்றுச்சூழல் மாசு அடைதல் உள்ளிட்ட பொதுவான சவால்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
பேச்சுவார்த்தையின் முதல்கூட்டத்தில் திங்கள்கிழமை கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, அமெரிக்காவும், சீனாவும் தங்களது உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக்கூடாது. பரஸ்பரம் மதிப்பளித்து நடக்க வேண்டும் என்று கூறினார்.
தைவானையும், திபெத்தையும் தங்களது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறிவருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகளால் சீனா அதிருப்தி அடைந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்தித்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

0 கருத்துகள்: on "அமெரிக்காவுடன் நெருங்கிய ராஜதந்திர உறவுக்குத் தயார்- சீனா"
கருத்துரையிடுக