அஹமதாபாத்:2005ம் ஆண்டு நடைபெற்ற ஷொராஹ்ப்த்தீன் போலி என்கவுண்டர் வழக்கில், கைது செயப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 11 குற்றவாளிகளை சி.பி.ஐ தன் காவலில் எடுத்து விசாரிக்க தனி நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.
அவர்கள் வைக்கப்பட்டிருக்கும் சபர்மதி சிறையில் வைத்தே அவர்களை விசாரிக்குமாறு நீதிபதி ஜே.வி. பரோட் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் போலீஸ் அதிகாரிகள் என்.கே.அமின் மற்றும் வி.எ.ரதோட் ஆகிய இருவரை காவலில் எடுப்பதிலிருந்து தவிர்த்துக் கொண்டது சி.பி.ஐ.
குஜராத் போலீசார் விசாரித்து வந்த இவ்வழக்கை கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே.
ஆனால்,குற்றவாளிகளை கைது செய்த பிறகு அவர்களை சி.பி.ஐ எடுத்து விசாரிப்பது இதுவே முதல் முறையாகும்.
source:Siasat

0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு- கைது செயப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி"
கருத்துரையிடுக