லண்டன்:கடந்த சனிக்கிழமையன்று, பிரிட்டன் மூத்த அதிகாரிகள் மற்றும் புதிய அரசின் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹகுவ்வுடன் ஆஃப்கான் வந்திறங்கிய ஒரு குழு, ஆப்கானிஸ்தானிலிருந்து மிக விரைவில் பிரிட்டிஷ் படைகளை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ராணுவ செயலாளர் லியம் பாக்ஸ், சர்வேதேச பிரிட்டன் செயலாளர் அன்றேவ் மிட்செல் உட்பட பல மூத்த அதிகாரிகள் தங்களை இம்மாதமே லண்டன் வந்து சந்திக்குமாறு ஆஃப்கான் அதிபர் ஹமித் கர்சாயை கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய வெளியுறவுச் செயலாளர் ஹகிவ் கூறுகையில், ஆஃப்கானில் தற்போது 10,000 பிரிட்டிஷ் படைகள் உள்ளதாக தெரிவித்தார். புதிய அரசின் மிக விரைவுத் திட்டத்தில், ஆஃப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
ஆஃப்கான் வரும் முன் ராணுவ செயலாளர் லியம் பாக்ஸ் தெரிவிக்கையில், ஆஃப்கானிஸ்தானின் தங்கள் பயணம் வெறும் படைகளை திரும்பப் பெற மட்டுமே நடத்தப்பட உள்ளது என்றார்.
'நாங்கள் எண்ணிக்கையில் மிக குறைவாக உள்ளோம் என்பதனை நான் இங்கு ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் எங்கள் கொள்கைகளை நாங்கள் ஒரு முறை திரும்ப மாற்றியமைக்க வேண்டும். பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்.நாங்கள் ஒன்னும் சர்வதேச போலீஸ் கிடையாது! நாங்கள் ஆப்கானை மேம்படுத்துவதற்கு வரவில்லை! மாறாக அவர்களால் பிரிட்டன் மக்களுக்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்பதற்காகவே வந்தோம்.
நான் எங்கள் படைகளை சந்தித்து பேச உள்ளேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து மாயமாக வேண்டும்!' என்று பாக்ஸ் சூச்சகமாக தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு அடுத்து பிரிட்டன் தான் அதிக அளவில் தன் படைகளை ஆஃப்கானில் வைத்துள்ளது. முழுவதுமாக மொத்தம் 130 வெளிநாட்டுப் படைகள் ஆஃப்கானில் முகாமிட்டுள்ளனர்.
வரும் மாதங்களில் தாக்குதல்களை தீவிரமாக்க அமெரிக்கா ஒருபுறம் பேசிகொண்டிருக்க, பிரிட்டன் புதிய அரசின் இம்முடிவு, ஆஃப்கான் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

source:siasat
0 கருத்துகள்: on "ஆஃப்கானிலிருந்து தன் படைகளை வாபஸ் பெற பிரிட்டனின் புதிய அரசு முடிவு"
கருத்துரையிடுக