15 மே, 2010

ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய அமெரிக்கர்களை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி

தெஹ்ரான்:ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய குற்றச்சாட்டிற்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் மூன்று அமெரிக்கர்களை அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று அமெரிக்கர்களையும் அவர்களது குடும்பத்தினர் சந்திப்பதற்காக ஈரானுக்கு பயணிப்பதற்கான விசாவினை வழங்குமாறு அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தூதுவருக்கு ஈரான் உத்தரவிட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிதநேய அடிப்படையிலேயே ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்களை குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மனோச்சர் மொட்டாகி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்களான ஷனே பௌர், சரா சௌட் மற்றும் ஜோஸ் பற்றால் ஆகியோர் ஈரானில் உளவு பார்ப்பதற்காக சட்டத்திற்கு முரணாக நாட்டுக்குள் ஊடுருவியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வருடம் ஜூலை 31ம் தேதி எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இம்மூவரும் அமெரிக்க உளவுப்பிரிவுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், இம்மூவரையும் குடும்ப உறுப்பினர்கள் சிறைச்சாலைகளில் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அதற்குரிய தேதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
source:BBC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய அமெரிக்கர்களை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி"

கருத்துரையிடுக