இஸ்லாத்திற்கெதிரான பகைமை சிலரின் சுயநலத்தால் நாளுக்கு நாள் அதிகரிக்க தான் செய்கிறது. இதில் ஒரு பகுதியாக, முஸ்லீம்களுக்கெதிராக போராடும் வகையிலும் பழி வாங்கும் வகையிலும், ஒவ்வொரு வருடம் மே20 ம் தேதியை முஸ்லீம்களை நினைவூட்டும் வகையில் உலகில் உள்ள கார்டூனிஸ்ட் எனப்படும் ஒவியர்கள் கொண்டாட தீர்மானித்துள்ளனர்.
சொவுத் பார்கில்,அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் 'வாருங்கள்! யாரும் முஹம்மத்தை வரையலாம்!' என்ற தலைப்பில் முதல் வருடாந்திர நிகழ்சியை நடத்த வார இதழ் ஒன்று அழைப்புவிடுத்துள்ளது.
இதை முன்னிறுத்தும் வகையில், டிரே பார்கர் மற்றும் மார் ஸ்டோன் என்ற ஒவியர்கள், தங்கள் 200வது நிகழ்சிக்காக, முஹம்மத்(ஸல்) அவர்களை சித்தரித்து வரைபடங்களை வெளியிடவுள்ளனர். வழக்கம்போல, இந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்டதும், இவர்கள் இருவருக்கும் மிரட்டல்கள் வந்து குவிந்தது.
முஹம்மத்(ஸல்) அவர்களின் உருவத்தை வரைவது அல்லது சித்தரிப்பது, முஸ்லீம்களை பொறுத்தவரையில் அது இஸ்லாத்திற்கு புறம்பானது. இதனை தொடர்ந்து, காமடி சென்ட்ரல் எனப்படும் அந்நிறுவனம், தன் தயாரிப்பாளர்கள் அனுமதி இல்லாமலயே சென்சார் செய்யப்படாத அடுத்த பாகத்தையும் வெளியிட்டது.
அதில் கூறப்பட்டதாவது;"வருகிற மே மாதம் 20ஆம் தேதி மில்லியன் கணக்கில் மக்கள் எங்களுடன் கைசேர்ந்து ஒரு படி முன் சென்று, இந்த ஒவியங்களை வெளியிடுவோம்.இதற்கு,முன்னர் நடந்ததிற்கு மிரட்டல்கள் வராமலிருந்திருந்தால், ஒரு வேலை நானும் அதை எதிர்திருப்பேன். ஆனால் முஹம்மத்(ஸல்)அவர்களின் ஒவியத்தை வெளியிட்டதற்காக அவர்கள் கொலை மிரட்டல்கள் விடுக்கின்றனர். இதற்கு,பதிலளிக்க ஒழுங்கான ஒரே ஒரு வழிதானுள்ளது. நமது உரிமை என்ன என்பது தைரியத்துடன் தெரிவிப்பது தான்! அதாவது முஹம்மத்(ஸல்)த்தின் ஒவியங்களை வெளியிடுவது. -(நரகத்தின் கதவுகளை கிழித்து காண்பிப்பதே!)
மிரட்டல்கள் விடும் இக்குழுக்களை பற்றி நான் கவலைப்படவில்லை, ஏனென்றால் இவர்கள் இருப்பதில் எனக்கு நம்பகத் தன்மை கிடையாது. ஆனால்,இஸ்லாமிய பழமை வாதிகளின் இந்த மிரட்டல்கள் மீண்டும் மீண்டும் வருவதை நாங்கள் காண்கின்றோம்.
நான் தனி மனிதனாக இருந்தாலும், என் ஆற்றல் என்ன என்பதனை காட்ட அவசியமில்லை. கொலம்பியனில் நடைபெற்றதை நீங்கள் மறந்திட வேண்டாம், அது வெறும் இரண்டு கல்லூரி மாணவர்களிடையே நடந்த ஒன்று.
இது டி.வி. ஷோ என்பதற்காக அல்ல! இது காமடி சென்ட்ரலின் உரிமைகளை பற்றி அல்ல! மாறாக ஒரு தனி நபரின் உரிமை! நம் நாட்டின் மரியாதைக்கான சவால்!
முஸ்லீம்கள் தொழும் உரிமைக்காக நின்றிடும் நீங்கள்! அவர்கள் மிரட்டல்களை விட சுதந்திரம் கொடுக்கும் நீங்கள்! டிரே பார்கர் மற்றும் மாட் ஸ்டோனின் சுதந்திரத்திற்காக நிற்பீர்களா?
சுதந்திரமா அல்லது பயமா? மரியாதையா அல்லது கோழைத் தனமா? இனி நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் பார்கர் மற்றும் ஸ்டோனின் உரிமைகளை வினவ நினைத்தால், அது சாத்தியமற்றது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: on "இஸ்லாத்திற்கெதிராக வளர்ந்து வரும் பகைமை"
கருத்துரையிடுக