பாரிஸ்:ஈரானுக்கெதிராக அமெரிக்கா ஏற்படுத்திய பொருளாதார தடையை மீறிய வழக்கில் ஈரானின் தொழிலதிபர் ஒருவரை பிரான்சு நீதிமன்றம் விடுதலைச் செய்தது. இதற்கு அமெரிக்க சட்டத்துறை அதிருப்தியை தெரிவித்துள்ளது.
ஈரானின் தொழிலதிபரான மாஜித் காகாவந்த் என்பவரைத் தான் நேற்று முன்தினம் பிரான்சு நீதிமன்றம் விடுதலைச் செய்தது. பிரான்சு நீதிமன்றத்தின் நடவடிக்கையில் தங்களுக்கு திருப்தியில்லை எனவும் நீதிக்காக(?) எங்கள் முயற்சி தொடரும் என்றும் அமெரிக்க அதிகாரப்பூர்வ சட்டத்துறை செய்தித் தொடர்பாளர் டீன் போய்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மாஜிதை கஸ்டடியில் எடுத்து விசாரணைச் செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக ராணுவ தொழில்நுட்பத்தை ஈரானுக்கு ஏற்றுமதிச் செய்தார் என்று குற்றஞ்சாட்டி 2009 ஆம் ஆண்டு மார்ச்சில் மாஜிதை பிரெஞ்சு போலீஸார் கைதுச் செய்தனர். இந்தக் கைது அமெரிக்க அரசின் நிர்பந்தத்தால் நடந்தது.
மலேசியாவில் மாஜிதின் கம்பெனி அமெரிக்க கம்பெனியிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி ஈரானுக்கு அனுப்பியதாக மாஜித் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆனால் மாஜித் இரட்டை உபயோக ராணுவ தொழில்நுட்பங்களை அனுப்பியதற்கு எந்த ஆதாரமுமில்லை என பிரெஞ்சு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்துதான் மாஜித் காகாவந்த்தை பிரான்சு நீதிமன்றம் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலைச் செய்தது.
மாஜித் நேற்று டெஹ்ரானிற்கு வந்த பொழுது அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈரான் தொழிலதிபரை பிரான்ஸ் விடுதலைச் செய்ததில் அமெரிக்காவிற்கு அதிருப்தி"
கருத்துரையிடுக