9 மே, 2010

ஐஸ்லாந்து எரிமலை சாம்பலால் மீண்டும் புகை மூட்டம், விமானப் போக்குவரத்து பாதிப்பு

ஐஸ்லாந்தின் அய்-யா-ஃபியா-லா-யெர்-குல் (ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை மீண்டும் சாம்பலைக் கக்கி வருவதால் மீண்டும் புகை மூட்டம் வெளிவரத் துவங்கியுள்ளதால், ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்து பாதிப்பை சந்தித்துள்ளது.

மீண்டும் எழுந்துள்ள இந்த சிக்கல் காரணமாக ஐரோப்பாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக செல்கின்றன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெயின் மற்றும் வடக்கு பிரான்ஸின் பெரும்பாலான வான் பகுதியை எரிமலைச் சாம்பல் ஆக்கிரமித்துள்ளது.

ஐஸ்லாந்திலிருந்து வடக்கு ஸ்பெயின்வரை கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர் அளவுக்கு வான்வெளியில் சாம்பல் நிறைந்திருப்பதால் விமானங்கள் கிரீன்லாந்து அல்லது தெற்குஸ்பெயின் வழியாக திருப்பி விடப்பட்டு சென்று வருகின்றன.

கடந்த மாதம் இந்த எரிமலைச் சாம்பல் ஆக்கிரமிப்பால் கிட்டத்தட்ட 10 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு ஐந்து நாட்கள் உலகம் முழுவதும் சர்வதேச விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது நினைவிருக்கலாம்.

தற்போதைய புதிய எரிமலைச் சாம்பலால் ஸ்பெயினில் 19 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பார்சிலோனா விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐஸ்லாந்து எரிமலை சாம்பலால் மீண்டும் புகை மூட்டம், விமானப் போக்குவரத்து பாதிப்பு"

கருத்துரையிடுக