9 மே, 2010

துருக்கி மலைச் சிகரத்தில் இருப்பது நோவாவின் கப்பலா?

ஹாங்காங்:துருக்கி நாட்டின் மலைச் சிகரத்தில்,சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது, பைபிளில் கூறப்பட்டுள்ள நோவாவின் கப்பலா என்பது குறித்து, ஆராய்ச்சியாளர் களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

உலகில் பாவச் செயல்கள் பெருகியதால், வெள்ளத்தால் உலகை மூழ் கடிக்க நினைத்த கடவுள், நோவா என்ற தீர்க்கதரிசியிடம்,'இன்னும் சில நாட்களில் உலகம் வெள்ளத்தில் மூழ்கி அழியப்போவதால், ஒவ்வொரு மிருகத்திலும் ஒரு ஜோடியைப் பாதுகாத்து, அவற்றை ஒரு கப்பலில் எடுத்துச் செல்' என கூறினார்.

ஊழிக்காலத்துக்கு பின் வெள்ளம் வடிந்த போது, நோவாவின் கப்பல், துருக்கி நாட்டிலுள்ள அராரத் என்ற மலைச்சிகரத்தின் மீது தங்கியது. பின் நோவாவும், உயிரிகளும் மலையிலிருந்து பூமியில் இறங்கி பெருகினர் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.இது 4,800 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.

ஹாங்காங்கைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குனர் எங் விங் செங் என்பவரின் தலைமையில் 'சர்வதேச நோவா கப்பல் மதகுருக்கள்' என்ற அமைப்பை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர், துருக்கிப் பகுதியில் நோவாவின் கப்பல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அராரத் மலைச் சிகரத்தின் ஒரு பகுதியில், அவர்கள் ஒரு கட்டுமானத்தைக் கண்டறிந்தனர். அதில் பல அறைகள் இருக்கின்றன. சில அறைகள் மரத்தால் ஆனவையாக உள்ளன.

இந்த மரத்தடுப்புகள், மிருகங்களை வைக்கப் பயன்படுத்திய அறையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து,'இது 100 சதவீதம் நோவாவின் கப்பல் என்று கூற முடியாவிட்டாலும், 99.9 சதவீதம் அதுதான் என்று கூற முடியும்' என்கிறார் எங் விங் செங்.

அராரத் சிகரம் அந்த பகுதியிலேயே மிக உயரமானது. கடல் மட்டத்திலிருந்து 5,515 மீட்டர் உயரத்தில் உள்ளது. துருக்கி அதிகாரிகள், அப்பகுதியை உலக புராதனச் சின்னமாக 'யுனெஸ்கோ' அறிவித்தால் தான், அப்பகுதியில் அகழாய்வுகள் நடத்த முடியும் என்கின்றனர்.
source:dinamalar

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துருக்கி மலைச் சிகரத்தில் இருப்பது நோவாவின் கப்பலா?"

கருத்துரையிடுக