ஜெருசலம்:இஸ்ரேலின் ஃபலஸ்தீன் விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கும், எதிர்ப்பு போராட்டத்தை பரவலாக்குவதற்கும் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை ஃபலஸ்தீனர்களின் துவக்கியுள்ளனர்.
இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிப்பதற்கு ஃபலஸ்தீன் அதாரிட்டி அரசின் அதிகாரப்பூர்வ ஆதரவு உண்டு. கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் புறக்கணிப்பிற்கான உத்தரவிடப்பட்டுள்ளது. இளைஞர் அமைப்புகள் பிரச்சாரத்தை துவக்கியுள்ளன.
இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணத்தை எதிர்ப்பதன் ஒரு பகுதியாக குடியேற்ற பிரதேசங்களில் பயிரிட்ட காய்கறிகளையோ, அன்றாட தேவைக்கான பொருட்களையோ சூப்பர் மார்க்கெட்டுகள் விற்பனைச் செய்யாது. இஸ்ரேலிய தயாரிப்புகளை விற்பவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதமோ அல்லது ஐந்து வருடம் சிறைத்தண்டனையோ வழங்கப்படும்.
இஸ்ரேல் தொடர்புடைய நிறுவனங்கள் வருடந்தோறும் 50 கோடி டாலர் வருமானத்தை விற்பனையின் மூலம் பெறுகின்றன. மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளும் இந்த புறக்கணிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரிட்டீஷ் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை தனியாக லேபல் ஒட்டி விற்கவேண்டுமென்று வியாபார ஏஜன்சியான டிபார்ட்மெண்ட் ஃபார் தி என்வியோன்மெண்ட் புட் அண்ட் ரூரல் அஃபயர்ஸ் உத்தரவிட்டுள்ளது. ஃபலஸ்தீன் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து கைப்பற்றி அதில் காய்கறிகளையும், பழங்களையும் விளைவித்து விற்பனைச் செய்யும் இஸ்ரேலியர்களை தடுப்பதும் இப்போராட்டத்தின் இன்னொரு நோக்கமாகும்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிச் செய்து இஸ்ரேல் லேபிள் ஒட்டித்தான் பெரும்பாலான பொருட்களும் ஃபலஸ்தீனிற்குள் வருகின்றது. இஸ்ரேலிய குடியேற்ற பிரதேசங்களில் உற்பத்திச் செய்யும், தயாரிக்கும் பொருட்களுக்கு யூரோப்பியன் யூனியன் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. இரண்டும் இரண்டுவிதமான லேபிள்களுடன் விற்பனைக்கு வெளியிடவேண்டுமென்பது சட்டமாகும்.
புறக்கணிப்பை வருகிற 15 ஆம் தேதி முதல் கூடுதல் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நக்பா கொண்டாட்டத்தின் பொழுது இது அறிவிக்கப்படும். ஃபலஸ்தீன் உரிமைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு நடத்தும் பேச்சுவார்த்தைகளோ, சமரசமோ தேவையில்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஃபலஸ்தீனர்களின் இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் துவக்கம்"
கருத்துரையிடுக