காபூல்:ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் நாளைமுதல் வலுவான தாக்குதல் நடத்தப் போவதாக தாலிபான் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளிலும் பாதுகாப்பு இல்லை என ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் அறிவித்துள்ள சூழலில் தாலிபானின் இவ்வறிக்கை வெளிவந்துள்ளது.
அரசு அதிகாரிகள் மீது தாக்குதல், கண்ணி வெடித்தாக்குதல், வெளிநாட்டவர்களுக்கும், அவர்களுக்கு உதவிச் செய்பவர்களுக்கும் எதிரான மனித வெடிக்குண்டு தாக்குதல் ஆகியவற்றை நிகழ்த்தப் போவதாக தாலிபான் அறிவித்துள்ளது.
எல்லா அந்நிய ஆக்கிரமிப்பாளர்களும் தோல்வியை சுவைப்பார்கள் என பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிய இ-மெயில் செய்தியில் தாலிபான் அறிவித்துள்ளது.
மலைப்பிரதேசங்களில் மக்கள் குளிர்காலத்தில் வீட்டினுள்ளேயே இருப்பதால் வசந்த காலத்தில் தாக்குதல் அதிகரிப்பது வழக்கமாகும். தாலிபானின் ஆதிக்கம் நிறைந்த காந்தகாரிலிருந்து போராளிகளை ஜுன் மாதத்திலேயே துரத்துவோம் என அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் அச்சுறுத்தியுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆப்கான்:நாளைமுதல் தாக்குதல் வலுப்பெறும்- தாலிபான்"
கருத்துரையிடுக