9 மே, 2010

நியூயார்க் வெடிகுண்டு:ஷெஹ்ஸாதிற்கு தாலிபான்களுடன் தொடர்பில்லை- அமெரிக்கா

வாஷிங்டன்:நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு வெடிப்பிற்காக முயற்சிச் செய்ததாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க குடிமகன் ஃபைஸல் ஷெஹ்ஸாதிற்கு தாலிபான் போராளிகளுடன் தொடர்பில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

போராளிக் கொள்கைகளில் விருப்பம் கொண்ட தனியாகவே இந்த கார் குண்டு திட்டத்தை தீட்டியுள்ளார் என அமெரிக்க புலனாய்வு கமிட்டி சேர்மனும் ராணுவ தலைவர் டேவிட் பெட்ரோஸும் கூறினார்கள்.

ஷெஹ்ஸாதிற்கு எந்தவொரு போராளி இயக்கத்துடனும் தொடர்பிருப்பதாக ஆதாரம் கிடைக்கவில்லை என கமிட்டி சேர்மனும் காங்கிரஸ் உறுப்பினருமான சில்வஸ்டர் ரேய்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்க புலனாய்வுத்துறையால் ஏன் ஷெஹ்ஸாதிற்கு தாலிபான் தொடர்பை கண்டுபிடிக்க இயலவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கவே அவர் இதனை தெரிவித்தார்.

துவக்கத்தில் ஷெஹ்ஸாதிற்கு பாக்.தாலிபானுடனும், ஜெய்ஷே முஹம்மது இயக்கத்துடனும் தொடர்பிருப்பதாக புலனாய்வு ஏஜன்சி குற்றஞ்சாட்டியிருந்தது. பாகிஸ்தானில் போராளிகளுடன் நேரடித் தொடர்பில்லை என பெட்ரோஸ் அசோசியேட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

தெற்கு வசீரிஸ்தானில் போராளி முகாமிலிருந்து ஷெஹ்ஸாதிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்ற அறிக்கையையும் அமெரிக்கா வாபஸ் பெற்றது. இதனைக் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல் கிடைக்கவில்லை எனவும் புலனாய்வு நடந்துக் கொண்டிருப்பதாகவும் வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸ் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நியூயார்க் வெடிகுண்டு:ஷெஹ்ஸாதிற்கு தாலிபான்களுடன் தொடர்பில்லை- அமெரிக்கா"

கருத்துரையிடுக