6 மே, 2010

பாட்லா ஹவுஸ் விசாரணை:நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக ப.சிதம்பரம்

புதுடெல்லி:பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபாவில் அறிவித்தார்.

வழக்கை விரைவில் முடிக்க இன்று காலையிலும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்பொழுது; 'கடந்த மாதம் வழக்கின் இறுதி குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. புலனாய்வு அதிகாரிகள் அவர்களுடைய பணியை தெளிவாக செய்கிறார்கள். ஆதாரங்களின் அடிப்படையிலேயே அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இச்சம்பவத்திற்கு தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு உள்ளது. சட்டத்தின் வழியிலேயே அரசு பயணிக்கும்.' என அவர் தெரிவித்தார்.

ராஜ்யசபையில் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் கமால் அக்தர் பாட்லா ஹவுஸ் சம்பவத்தை குறித்து கேள்வி எழுப்பினார். அஜ்மீர் குண்டு வெடிப்பினைப் போல் பாட்லா ஹவுஸ் சம்பவத்திற்கு பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருக்கலாம் எனக்கூறினார். கமால் அக்தரின் பேச்சுக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் ரகளை செய்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாட்லா ஹவுஸ் விசாரணை:நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக ப.சிதம்பரம்"

கருத்துரையிடுக