திருவனந்தபுரம்:ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கிய 9-ஆம் வகுப்பு பயிலும் நபாலா என்ற முஸ்லிம் மாணவியை உடனடியாக பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்திய கல்வித்துறை துணை இயக்குநர் ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததாக பொது கல்வி இயக்குநர் எ.பி.எம்.முஹம்மது ஹனீஷ் தேஜஸிடம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தைக் குறித்து சரியான விளக்கத்தைப் பெற பள்ளிக்கூட நிர்வாகத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்களை காண முடியவில்லை என்றும், அவர்களிடமிருந்து கிடைத்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும் துணை இயக்குநரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைக் குறித்த விரிவான விசாரணை தொடரும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஹிஜாப்:முஸ்லிம் மாணவியை உடனடியாக பள்ளிக்கூடத்தில் சேர்க்க கேரள அரசு உத்தரவு"
கருத்துரையிடுக